Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டில் பிரித்தானிய அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நோர்வே ஈழத்தமிழர் அவையினால் நடாத்தப்பட்டுள்ளது. இக்கவனயீர்ப்பு போராட்டமானது 13ம்திகதி பிற்பகல் மூன்று மணி தொடக்கம் நான்கு மணிவரை இடம்பெற்றது.  இப்போராட்டத்தில் குறிப்பிடத்தக்களவு மக்கள் கலந்து கொண்டு, தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

பொதுநலவாய அமைப்பிலிருந்து சிறிலங்காவை வெளியேற்று| மற்றும் |இனஅழிப்பு புரிந்த சிறிலங்கா அரசின் தலைமையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணி| போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் நோர்வே மக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் முடிவில் பிரித்தானிய தூதரக அரசியல் துறை பிரதிநிதி கத்தி டெய்லர் (Cathy Taylor) அவர்களிடம் மனு ஒன்றை நோர்வே மக்கள் அவை பிரதிநிதிகள் கையளித்தனர்.

இம்மனுவில் பொதுநலவாய நாடுகளுக்கான ஒழுங்குப் பிரமாணங்களை மீறும் நாடுகள் மீது, அமைப்பானது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வழக்கம் உண்டு. அதன் அடிப்படையில் தென் ஆபிரிக்கா, பிஜி தீவு, நைஜீரியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் பொதுநலவாய அமைப்பிலிருந்து ஒரு சில ஆண்டுகள் விலக்கி வைக்கப்பட்டமையை மனு சுட்டிக்காட்டிக் காட்டியதுடன், அந்த வகையில் இனஅழிப்பு புரிந்த சிறிலங்கா அரசை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைக்குமாறு கோரப்பட்டிருக்கின்றது.

0 Responses to பிரித்தானியா கலந்துகொள்ளக்கூடாது என நோர்வேயில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com