Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி உடல் நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார் முன்னாள் வேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.   அவரின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி பூலாவரி தி.மு.க அலுவலகத்தில் இருந்து அவரின் உடலை அடக்கம் செய்த இடம் வரை மௌன அஞ்சலி ஊர்வலம் செல்வதாக மாவட்ட தி.மு.க அறிவிக்க,  காலை ஏழு மணியில் இருந்தே உடன்பிறப்புகள் கண்ணீரோடு திரள தொடங்கினர்.

மாவட்டமெங்கும் நினைவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.   எம்.பி கனிமொழி 8 மணிக்கு பூலாவரி தி.மு.க அலுவலகத்தில் வீரபாண்டியார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு அவரும் ஊர்வலத்தில் பங்கேற்றார்.

முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பன்னீர்செல்வம், எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோரும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இறுதியாக அடக்கம் செய்த இடத்தை அடைந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அங்கே வீரபாண்டியார் மகள் மகேஸ்வரி,ராஜா அனைவரும் கண்ணீரோடு இருக்க அவர் களுக்கு கனிமொழி ஆறுதல் கூறினார்.

படங்கள் -செய்தி : இளங்கோவன்

0 Responses to வீரபாண்டியாருக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com