ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்பதாக தமிழ் பிரதேசங்களினில் மனித உரிமைகள் மேம்பட்டு வருவதாக காண்பிக்கும் நாடகங்களை அரங்கேற்றும் நடவடிக்கைகளினில் இலங்கை அரசு முனைப்புக்காட்டத்தொடங்கியுள்ளது.அவ்வகையினில் காணாமற்போனோர் தொடர்பில் வடக்கு மக்களிடம் சாட்சியங்களைத் திரட்டுவதற்காக காணாமற்போனோர் பற்றி விசாரணை நடத்த மஹிந்த நியமித்துள்ள ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் செய்யவுள்ளது.
மூவரடங்கிய இந்தக் குழுவுடன் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசாரணைக்குழுவொன்றும் அங்கு செல்லவுள்ளது.ஜனவரி 15ஆம் திகதியளவில் வடக்குப் பயணத்தை ஆரம் பிக்கும் இந்தக் குழு 5 மாவட்டங்களிலும் மக்கள் அமர்வுகளை நடத்திக்காணாமற்போனோர்களின் உறவினர்களிடம் தகவல்களைப் பெறவுள்ளதாம். காணாமற்போனோர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்று ஆணைக்குழுவிடம் தகவல்களை வழங்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் இதுவரை எழுத்து மூலம் 11ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் இவை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் தகவல்களைத் திரட்டிய பின்னர் இந்தக் குழு கிழக்கு மாகாணத்துக்கும் செல்லவுள்ளது. பெப்ரவரி மாதமளவில் கிழக்கு பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெனீவா கூட்டத்தொடர் வரை இதனது ஆயட்காலத்தை இழுத்தடிக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.
இதனிடையே ஏற்கனவே இத்தகைய பல அமைப்புக்கள் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்த போதும் அதற்கு என்ன நடந்ததென்பது தெரியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மஹிந்தவின் ஜெனீவா நாடகங்கள் தயார்! முதல் கட்டமாக காணாமல் போனோருக்கு தீர்வாம்!!