இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிர்தேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு வடபகுதிக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடனும் குறித்த குழு பேச்சு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் இலங்கைப் பயணத்தை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளன. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர், நிர்தேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க தூதுக்குழு பயணம் தொடர்பில் தற்போது அறிக்கையிடுவதற்கு ஒன்றுமில்லை. எனினும், இராஜாங்கக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களை நிராகரிப்பதற்குமில்லை" என்று தூதரகத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்கக் குழு இலங்கை வந்தால் நிச்சயம் கூட்டமைப்பைச் சந்திக்கும் என்று அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

0 Responses to அமெரிக்க உயர்மட்டக்குழு வருகை உறுதியானது! வடக்கிற்கும் விஜயம்! கூட்டமைப்பினையும் சந்திக்கின்றது!!