ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ள நிலையில், இதன் போது தங்களுக்கு ஆதரவினை திரட்டும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டில் மனித உரிமைகள் மாநாட்டில் அங்கம் வகித்து, வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களை தனித்தனியாக இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறாக தூதுவர்களை சந்தித்து, இலங்கை இராணுவத்துக்கு சாதகமாக தயாரிக்கப்பட்ட காணொளிகள் போன்றவற்றை காண்பித்து, அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தலைமையிலான குழு ஒன்று மேற்கொள்கிறது.
இதன்படி அண்மையில் கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் இந்திரா லோபஸை சந்தித்துள்ள இலங்கை குழுவினர், அவரின் ஆதரவையும் பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக எவ்வகையான பிரேரணை கொண்டு வரப்பட்டாலும், கியூபா அதற்கு எதிராகவே வாக்கினை பயன்படுத்தும் என்று கியூபாவின் தூதர் இலங்கைக்கு வாக்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ஜெனீவாவில் பிரேரணையை முறியடிக்க ஆதரவு தேடும் மகிந்த அரசாங்கம்