60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பை யேர்மனியில் நடைபெற்ற தீர்பாயத்தில் ஆராய்ந்து உண்மைத்தன்மையுடன் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
சர்வதேச ரீதியாக பல கண்டங்களில், பத்துக்கும் மேலான நாடுகளில் இருந்து கலந்துகொண்ட நீதிபதிகள் எவ்வித அரசியல் பின்னணியும் அல்லாமல், சிங்கள இனவெறி அரசால் பாதிக்கப்பட்டு தீர்ப்பாயத்தில் சமூகம் அளித்த சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சுயாதீனமாக ஆராய்ந்து நீதியை நிலை நாட்ட உண்மையின் வடிவமாகவே கொடுக்கப்பட்ட தீர்ப்பு அமைகின்றது.
உரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் இத் தீர்ப்பாயத்தை நடாத்திய சர்வதேச மனிதவுரிமை அமைப்பு பிரேமேன் - யேர்மனி , மற்றும் இலங்கையில் சமாதானத்துக்கான ஐரிஷ் பேரவை இரு அமைப்புகளுக்கும் எமது உணர்வுபூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தீர்ப்பாயத்தின் உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கை பின்வருமாறு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
சிறீலங்கா குறித்த மக்கள் தீர்ப்பாயம் - கட்டம் 02 டிசெம்பர் 07 தொடக்கம் 10 ஆம் நாள் வரை யேர்மனின் பிரேமன் நகரில் நடைபெற்றது.
நீதிபதிகள் குழு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா இனப்படுகொலை குற்றம் இழைத்திருப்பதை கண்டறிந்து தீர்ப்பு வழங்குகியுள்ளது; பிருத்தானியா மற்றும் அமெரிக்கா அதற்கு உடந்தையாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளன, அதேவேளை இந்தியாவின் உடந்தை குறித்து மேலதிக சான்றுகளுடன் ஆய்வு செய்வதற்காக நிலுவையில் இருப்பதால் இந்தியா குறித்து நீதிபதிகள் தமது முடிவை வெளியிடவில்லை.
சிறீலங்கா மீதான இரண்டாம் கட்ட மக்கள் தீர்ப்பாயம் யேர்மனின் பிரேமன் நகரில் கூடி, தனது தீர்ப்பை வழங்கியதோடு நிறைவுகண்டது. பதினொரு சிறப்பு நீதிபதிகள் கொண்ட குழு ஒருமனதாக ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா இனப்படுகொலைக் குற்றம் புரிந்துள்ளதுடன், இந்தக் குற்றம் இன்றும் தொடர்ந்து நீடிப்பமை கண்டறிந்துள்ளது.
இந்தத் தீர்ப்பாயமானது பாதிக்கப்பட்டுவரும் ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனக் குழுமம் என்னும் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளது.
ஈழத் தமிழ் இனக் குழுமத்துக்கு எதிரான இனப்படுகொலையானது தமது அடையாளத்தின் ஒட்டுமொத்த அழிவை இன்னும் எட்டியிருக்க வில்லை என தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. இனப்படுகொலை ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளின் திட்டம் மே-2009 இல் அதன் உச்சத்தை எட்டியிருந்தது; ஆனால் ஈழத் தமிழ் இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்கான சிறீலங்கா அரசின் செயல்திட்டம் இங்கு தெளிவாக உள்ளது, ஆகிய விடயங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளமை ஆனது இனப்படுகொலை நடைமுறையில் இருப்பதையும் அந்த நடைமுறை தொடர்ந்து நீடித்துவருவதையும் காட்டுகிறது. இனப்படுகொலை மூலோபாயமானது, குற்றம் புரிந்தவர்களால் நிலப்பரப்பு கட்டுப்பாட்டுக்குள் சென்றதும் மாற்றமடைந்துள்ளது. கொலைகள் வேறு வடிவங்கள் கொண்ட நடவடிக்கை ஊடாக உருமாற்றப் படுகின்றன, ஆனால் அந்த இனக் குழுமத்தையும் அதன் அடையாளத்தையும் அழிப்பதற்கான உள்நோக்கம் இன்னும் இருப்பதுடன், அது ஈழத் தமிழ் இனக் குழும அங்கத்தினருக்கு மோசமான உடல், உள ரீதியிலான தீங்கு விழைவிப்பதன் ஊடாக தொடர்ந்து நீடித்துவருகிறது.
சிறீலங்கா அரசால் பின்வரும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமை எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி ஆதாரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் கருதுகிறது.
(அ) இனக் குழுமத்தின் அங்கத்தினரை கொலை செய்தல் என்பது பின்வருமாறு உள்ளடங்குகிறது, படுகொலைகள் செய்தமை, பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள் மேற்கொண்டமை, மாபெரும் கொலைகளை செய்யும் உள்நோக்கத்துக்காக 'போர் தவிர்ப்பு வலயங்கள்' ஆக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்களை நகர்த்தும் மூலோபாயத்தை கையாண்டமை, வெளி உலகத்துக்கு சிறீலங்காவின் இனப்படுகொலை செயல்திட்டத்தை வெளிப்படுத்தும் தகுதிகொண்ட வெளியுலகப் பேச்சாளர்களை அரசியல்படுகொலை செய்தமை போன்றன.
(ஆ) இனக் குழும அங்கத்தினருக்கு உடல் அல்லது உள ரீதியாக மோசமாக தீங்கிழைத்தல் என்பது பின்வருமாறு உள்ளடங்குகிறது, சித்திரவதை செயல்பாடுகளில் ஈடுபட்டமை, ஈவிரக்கமற்ற அல்லது கீழ்த்தரமான நடத்தைகள் புரிந்தமை, கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் வன்முறைகளைப் புரிந்தமை, அடித்தல் மற்றும் கொலை அச்சுறுத்தல்கள் கொண்ட புலன்விசாரணைகளைச் செய்தல், அத்துடன் அது உடல் ஆரோக்கியத்தைப் பாதித்தல் அல்லது காயம், உருக்குலைவு என்பன ஏற்படக் காரணமாக அமைதல் போன்றன.
(இ) இனக் குழுமத்தின் வாழ்க்கை நிபந்தனைகளில் அதன் பௌதீக ரீதியான அழிவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திட்டமிட்டு வேண்டுமென்றே ஏற்படுத்துதல், என்பது பின்வருமாறு அடங்குகிறது.
1.பாதிக்கப்பட்டவர்களை தமது வீடுகளிலிருந்து வெறியேற்றுதல், 2.தனியார் நிலங்களை வன்பறித்தல், 3.தமிழர் நிலத்தை கையகப் படுத்துவதற்காக பெரும் நிலப்பரப்பை 'இராணுவ உயர் பாதுகாப்பு வலையங்கள்' ஆக அறிவித்தல் போன்றன.
மேலும், தீர்ப்பாயம் பின்வரும் தொடர்புபட்ட சான்றையும் உள்வாங்கிக் கொண்டது:
(ஈ) குறித்த இனக் குழுமத்துக்குள் இனப் பெருக்கத்தை தடுப்பதற்கான உள்நோக்கத்துடன் வழிமுறைகளைச் சுமத்துதல் என்பது பின்வருமாறு அடங்கும், ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு பலவந்தமாக மலட்டுத்தன்மை ஏற்படுத்துதல் (forced sterilization) மற்றும் கட்டாய கர்ப்பத்தடை வழிமுறைகள் மேற்கொள்ளுதல் போன்றன. இவை இனப்படுகொலை குற்றங்களாக கருத முடிவதற்கு முன்னர் ஏனைய பிரதேசங்களில் எந்த அளவிற்கு இதன் நடைமுறை உள்ளது என்பது குறித்த மேலதிக புலன் விசாரணை தேவைப்படுகிறது.
பிருத்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இனப்படுகொலை குற்றத்துக்கு உடந்தையாக இருந்தமை கண்டறியப்பட்டன என்பது பின்வரும் விடயங்களை உள்ளடக்கி அமைகிறது, -- இனப் படுகொலையை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப் படலாம் என்பது அறிந்தும் படைக்கலன்கள், படையப் பொருட்கள், கருவிகள் முதலியவற்றை வழங்குவதன் மூலம் அல்லது ஏனைய பிற வடிவங்களில் உடந்தையாக இருந்தமை -- இவ்வாறான செயல்களை திட்டமிட்டு நிறைவேற்றுவதில் இனப்படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு தெரிந்தும் உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை.
சறீலங்கா அரசு தானாகவே இனப்படுகொலை இலக்குகளை அடைவதற்கான ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டு, முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் வாயிலாக பிருத்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்துள்ளன என்பதை தீர்ப்பாயம் நம்புகிறது. எவ்வாறாயினும், வழங்கப்பட்ட நேர ஒழுங்கிற்கு அமைய இந்தியா மற்றும் பிற நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்துக்கு உண்மையாகவே உடந்தையாக இருந்துள்ள சாத்தியப்பாடு குறித்து மேலதிக சான்றுகளை பரிசீலிப்பதை நிலுவையில் வைத்துள்ளதுடன், தீர்ப்பாயம் தற்போது இதுகுறித்து தனது முடிவை அறிவிப்பதில்லை என முடிவுசெய்தது.
30 இற்கும் மேற்பட்ட நேரடி கண் சாட்சிகள் மற்றும் வல்லுநர்கள் பல்வேறு குற்றங்கள் மீதான ஆதாரங்களை வழங்கி சாட்சியமளித்தார்கள். அவை இனப்படுகொலை குற்றங்களை நிறுவுவதாக வரையறுக்க முடியும்.
தீர்ப்பாயத்தின் இரண்டாம் கட்ட அமர்வுகள் இணையத்தளம் (http://ptsrilanka.org/)ஊடாக நேரஞ்சலாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
சிறீலங்காவில் 2009ஆம் ஆண்டு ஆரம்பத்தில் போரின் இறுதி மாதங்களின் போது தமிழ் மக்கள் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப் பட்டிருந்ததை 2010 ஜனவரியில் அயர்லாந்தின் டப்பிளின் நகரில் கூடிய முதலாம் கட்ட அமர்வால் முன்மொழியப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவும், அத்துடன் இனப்படுகொலை குறித்த கேழ்வியோடு மேலதிக விரிவான புலன்விசாரணை மேற்கொள்ளப் படுவதற்காகவும் இந்த இரண்டாம் கட்ட அமர்வு பரேமனில் கூடியது.
சிறீலங்கா மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இந்த இரு கட்டங்களும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பிரேமன் ((IMRV)) மற்றும் இலங்கையில் சமாதானத்துக்கான ஐரிசு அவை ((IFPSL)) ஆகிய அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட வாதத்துக்கு அமைய நிறுவப்பட்டுள்ளன. முதலாம் கட்ட தீர்ப்பாயத்தில் கூடியது போன்றே இங்கு பிரேமனில் கூடிய நீதிபதிகள் குழுவும் இனப்படுகொலை ஆய்வுகளில் வல்லுநர்கள், முன்னாள் ஐ.நா. அதிகாரிகள், சர்வதேச சட்ட வல்லுநர்கள் மற்றும் புகழ்பெற்ற சமாதான மற்றும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரை கொண்டிருந்தது (நீதிபதிகள் குழுவின் விரிவான தகவலை அறிந்துகொள்ள பின் இணைப்பை பார்க்கவும்).
டிசெம்பர் 10, 2013
மனித உரிமைகள் நாள்.
The Peoples’ Tribunal on Sri Lanka ‐ Session II
7th ‐ 10th December 2013 Bremen, Germany
Panel of Judges
Co‐Chairs
Daniel Feierstein
Director of the Centre for Genocide Studies at the Universidad Nacional de Tres de Febrero, Professor in the
Faculty of Genocide at the University of Buenos Aires and a member of CONICET (Consejo Nacional de
Investigaciones Cientificas y Tecnicas ‐ The Argentine National Centre for Scholars). He has been elected as the
president of the 'International Association of Genocide Scholars'.
Denis Halliday
Former Assistant Secretary‐General of the United Nations. He resigned from his 34 year old career in the UN in
protest of the economic sanctions imposed on Iraq by the Security Council. Laureate of the Gandhi
International Peace Award.
Judges (alphabetical order)
Gabriele Della Morte is a researcher and Professor of International Law at the Università Cattolica di Milano.
He was also associate professor in International system, institutions and rules, Chargé de cours at the
Académie de droit international humanitaire et des droits de l'homme of Geneva (2007‐2008), counsel for the
International Criminal Tribunal for Rwanda (ICTR) (2003‐2004), Law Clerk for the Prosecutor Office of the
International Criminal Tribunal for the former Yugoslavia (2000) and member of a government delegation for
the establishment of the International Criminal Court (1998).
José Elías Esteve Molto, international lawyer and legal expert on Tibet. He is the main lawyer who researched
and drafted both lawsuits for international crimes committed in Tibet and a recent one for crimes in Burma.
He is a Professor in International Law at the University of Valencia.
Sévane Garibian
An expert on Genocide and International Law. She is an Assistant Professor at the University of Geneva and
Lecturer at the University of Neuchâtel, where she teaches Legal Philosophy and International Criminal Law.
Her work focuses on issues related to law facing State crimes.
Haluk Gerger
A respected academic and a Middle East analyst who was imprisoned in Turkey for his political activism. He is
known for his support for Kurdish people's right to self‐determination.
Javier Giraldo Moreno
Colombian Theologian and human rights activist based in Bogota. Known for his depth of analysis in
contextualizing genocide affected communities. He is Vice‐President of the Permanent Peoples’ Tribunal.
Manfred O. Hinz
Professor for Public Law, Political Sociology and Sociology of Law at the University of Bremen. He has a long
history of engagement in solidarity with liberation struggles in Africa, specially Namibia and the West Sahara.
He, for several years, held the UNESCO chair for human rights and democracy of the University of Namibia
whilst he was a professor there.
Helen Jarvis
She has worked on the issue of genocide in Cambodia since the mid‐1990s, with Yale University’s Cambodian
Genocide Program; the Cambodian Government Task Force for the Khmer Rouge Trials; and the Extraordinary
Chambers in the Courts of Cambodia (ECCC) as Chief of Public Affairs and then Chief of the Victims’ Support
Section.
ØysteinTveter
A Norwegian scholar of International Law and a member of the Permanent Peoples’ Tribunal on extra‐judicial
killings and violations of human rights in the Philippines.
Maung Zarni
He is a Burmese democracy activist who founded the Free Burma Coalition in 1995. He is one of the few
Burmese intellectuals who have come forward to unconditionally oppose the increased discrimination and
violence against the Rohingya Muslims and publicly criticised Aung San Suu Kyi on this issue.
PERMANENT PEOPLES’ TRIBUNAL
General Secretary:
GIANNI TOGNONI (ITALY)
GENERAL SECRETARIAT: VIA DELLA DOGANA VECCHIA 5 ‐ 00186 ROME
Tel/Fax:0039 06 6877774
E‐mail; tribunale@internazionaleleliobasso.it;‐ filb@iol.it
Web: http://www.internazionaleleliobasso.it
Contact for IFPSL: Dr. Jude Lal Fernando (irishpeaceforum@gmail.com)
Contact for IMRV: Nicolai Jung (imrvbremen@gmail.com)
For background about the Dublin Tribunal and for upcoming updates see: www.ptsrilanka.org
Internationaler Menschenrechtsverein Bremen e.V.
Kornstraße 31 | 28201 Bremen | Deutschland | Fax: +49 421 68 437 884 | imrvbemen@gmail.com

0 Responses to உண்மையை நிலை நாட்டிய மக்கள் தீர்ப்பாயம் - யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை வாழ்த்து