Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஏற்கனவே உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் மட்டும் இணைந்து தனித்துப் போட்டியிடப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கருணாநிதி அறிவித்திருந்த நிலையில், இன்று கோபால புரத்தில் உள்ள தமது இல்லத்தில் கருணாநிதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் சந்தித்தார். அதன் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்கள், காங்கிரசுடனும் கூட்டணி இல்லை, பாஜகவுடனும் கூட்டணி இல்லை என்றால் திமுக தனித்துப் போட்டியிடுமா எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கருணாநிதி ஆமாம். ஏற்கனவே எங்களுடன் உள்ள தோழமை கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம் என்றார்.

பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறதே என்கிற மற்றொரு செய்தியாளரின் கேள்விக்கு இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.  கூட்டணிக்காக திமுக அழைப்பு விடுத்தால், பரிசீலிப்போம் என்று பாஜ தலைவர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறாரே என கேட்கப்பட்ட கேள்விக்கு  பாஜவை நாங்கள் அழைப்பது என்று எதுவும் முடிவு செய்யவில்லை என்றார்.  அதேவேளை 3வது அணி அமையுமா என்கிற கேள்விக்கு, 'அமையும் வாய்புக்கள் உள்ளது' என்றும் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

0 Responses to நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் : கருணாநிதி அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com