Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஜனவரி 3ம் திகதியுடன் பிரதமர் மன்மோகன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்கிறார் என வெளியாகிய தகவல்களுக்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோகபூர்வமாக ஒரு ஊடக உரை ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தும் முதல் உத்தியோகபூர்வ ஊடக உரை இது.  லோக்சபா தேர்தலுக்கு முன்னர் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார். அதுவும் குறித்த ஊடக உரை நிகழ்த்திய தருணமே தனது ராஜினாமா முடிவை அறிவிப்பார் என என எழுந்த வதந்திகளை பிரதமர் அலுவலகம்  மறுத்திருந்த நிலையிலேயே பிரதமர் நிகழ்த்தப்போகும் இந்த உரை எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஒரு கட்சிப் பிரமுகராக அல்லாது, அமைச்சராக என்னிடம் கேட்டால், காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை இப்போது அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நிச்சயம் அதனை விரைவாக செய்ய வேண்டும் என என்றார். தொலைக்காட்சி ஊடகச்செவ்வி ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி  தோற்கடிக்க முடியாதவர் எனக் கூற முடியாது. ஒவ்வொருவரிடமும் பலம், பலவீனம் இரண்டும் இருக்கிறது எனவும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் இன்னமும் நான்கு மாதங்களுக்குள் நடத்தப்பட்டு விட வேண்டும் எனும் நிலையில் காங்கிரஸ் கூட்டணி தனது பிரதமர் வேட்பாளரை இன்னமும் அறிவிக்காது தாமதித்து வருகிறது.

இதேவேளை நாட்டில் கந்து வட்டி கொடுமை இல்லாமல் போக வேண்டும் என்றால், வங்கி கிளைகளை அதிகம் திறக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் புதிய வங்கி கிளையைத் துவக்கி வைத்துப் பேசியுள்ள ப.சிதம்பரம், முன் காலத்தில் மக்களுக்கு அவசரமாக பணம் வேண்டும் என்றால், கந்து வட்டிகாரர்கள் மட்டுமே கொடுத்து  உதவும் நிலை இருந்தது. இதனால், மக்கள் வட்டி கொடுமை அனுபவிக்கவும் நேர்ந்தது.

இதை தடுத்து மக்களிடம் கந்து வட்டி காரர்களுக்கு பதிலாக ஒரு பாலம் போல வங்கிகள் அமைய வேண்டுமானால், தேசிய அளவில் நிறைய வங்கி கிளைகள் திறக்க வேண்டும் என்றும், வங்கி என்றால் பணம் போடுபவர்களும் இருக்க வேண்டும், கடன் வாங்குபவர்களும் இருக்க வேண்டும். அப்போதுதான் வங்கிகளின் வளர்ச்சிக்கும் அது உதவும், மக்களுக்கு வங்கிகள் ஒரு பாலம் போல இருக்கவும் இந்த நடைமுறை உதவும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

0 Responses to பிரதமர் பதவி விலகுகிறாரா? : பிரதமர் அலுவலகம் மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com