வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஆனாலும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆட்சியமைத்துள்ள 4 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் சந்திப்பைப் புறக்கணித்துள்ளனர்.
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலேயே யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பிரதேச அபிவிருத்தி, நிர்வாக ஒழுங்கு முறைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிற்கான சட்ட அமுலாக்கல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையடப்பட்டது.
எனினும், யாழ் மாநகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபை ஆகிய 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைத்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதன் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கெடுத்திருக்கவில்லை.
இதனிடையே, மத்திய அரசாங்கத்துடன் மட்டுமல்ல, வடக்கினை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான மாகாண அரசாங்கத்துடனும் இணக்கமான அரசியலை முன்னெடுக்கவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விரும்புகின்றது என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை தெரிந்திருந்த நிலையில், அந்தக் கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் முதலமைச்சருடானான சந்திப்பை தவிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடக்கு முதலமைச்சருக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு: ஈபிடிபி புறக்கணிப்பு