தென் சூடானில் அதிபர் சால்வா கீர் இற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கு அந்நாட்டின் முன்னால் பிரதி அதிபர் ரியெக் மச்சர் தலைமை தாங்கி வருகின்றார்.
இந்த வன்முறைகளில் 1000 இற்கும் அதிகமானோர் கொல்லப் பட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்தும் உள்ள நிலையில் அங்கு அதிபர் சால்வா கீர் இற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தையை நிகழ்த்த கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் சமீபத்தில் முயன்றன.
இந்த முயற்சியில் போதுமான மாற்றங்கள் நிகழாத காரணத்தால் தென் சூடான் கிளர்ச்சிப் படைத் தலைவரான ரியெக் மச்சரை இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்குமாறும் இல்லாவிட்டால் அதன் அயல் நாடுகளின் இராணுவ நடவடிக்கைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் அவரை எச்சரித்ததாக உகண்டா அதிபர் யோவெரி முசெவெனி தெரிவித்துள்ளார்.
முசெவெனி தென் சூடான் அதிபர் சால்வா கீரை அதன் தலைநகர் ஜுபாவில் திங்கட்கிழமை சந்தித்திருந்ததுடன் மச்சர் சமாதான ஒப்பந்தத்துக்கு இணங்க அவருக்கு 4 நாட்கள் அவகாசமும் கொடுத்துள்ளார். நாளை அதாவது டிசம்பர் 31 ஆம் திகதி கீர் மற்றும் மச்சர் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து ஓர் இணக்கத்துக்கு வருமாறு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் இருவருக்கும் அழுத்தம் தெரிவித்துள்ளார் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை உகண்டாவின் படைகள் ஜூபா சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்து வைக்கப் பட்டுள்ளதுடன் வன்முறைகளில் பாதிக்கப் பட்டு வெளியேற நினைக்கும் பொது மக்களுக்கு உதவியும் செய்து வருகின்றன.

0 Responses to தென்சூடான் கிளர்ச்சிப் படைத் தலைவர் மீது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் எச்சரிக்கை