புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகர காவல்துறை விதித்துள்ளது.புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் எதுவும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக் கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை உஷாராகி உள்ளது.
அதன் படி புத்தாண்டு கொண்டாடப்படும் விடுதிகளில் ஜனவரி 1ம் திகதி அதிகாலை வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,
இந்த கொண்டாட்டங்களின் போது, மதுபானம் அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், வாகனங்கள் சோதனை 31ம் திகதி காலை முதலே தொடங்கி விடும் என்றும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிய வருகின்றன. ஜனவரி அதிகாலை 1 மணிக்குள் வீடுகளுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் இருக்க கூடாது என்றும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை.

0 Responses to புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடு!: சென்னை மாநகர காவல்துறை!