வங்கதேசத்தில் வன்முறைகளுக்கு மத்தியில் சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஷெயிக் ஹசீனா இன்று ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் பிரதமராக 3 ஆவது முறை பதவியேற்கின்றார்.
இவருடன் இணைந்து 48 கேபினெட் உறுப்பினர்களும் பதவியேற்கின்றார். நடந்து முடிந்த தேர்தலை வங்கதேசத்தின் எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஷெயிக் ஹசீனாவின் பதவியேற்பு வைபவம் பங்காபவன் அதிபர் மாளிகையில் வங்கதேச அதிபர் அப்துல் ஹமிட் தலைமையில் நடைபெற்றது. இதில் அரச அலுவலர்களுடன் முக்கிய இராணுவ அதிகாரிகளும், வெளிநாட்டுத் தூதர்களும் பொதுமக்கள், சமூகத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தில் 66 வயதாகும் ஹசீனா அதிபர் ஹமீட் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர் பார்வையாளர் தரப்பில் இருந்து பலத்த கரகோஷம் எழுந்தது. மேலும் இப்பதவியேற்பு வைபவம் வங்கதேச தொலைக் காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப் பட்டது.
மேலும் இதன் மூலம் வங்கதேசத்தில் 29 அமைச்சர்கள், 17 மாநில அமைச்சர்கள், 2 பிரதி அதிபர்கள் ஆகியோர் புதிதாக நியமிக்கப் பட்டுள்ளனர். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த போதும் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 231 ஆசனங்களுடன் வெற்றி பெற்றது. ஆயினும் இத்தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட வன்முறைகளில் 21 பேர் கொல்லப் பட்டதுடன் பெரும்பாலான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வங்கதேசப் பிரதமராக 3 ஆவது முறை பதவியேற்றார் ஷெயிக் ஹசீனா