மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும் வடக்கு மக்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செயலமர்வொன்றில் உரையாற்றும் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்கிற எண்ணம் மக்களிடத்தில் எடுத்துள்ளது. ஆனால், கிராம மட்டத்திலிருந்து தொழில்சார் முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
வடக்கின் பாதுகாப்பு சீராக உறுதிப்படுத்தப்படும் போது இங்கிருந்து புலம்பெயர்ந்த கல்விமான்களும், புத்திஜீவிகளும் திரும்பி வந்து மோதல்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எமது மக்களின் ஒரு தொகுதியினர் வாழ்வாதார நெருக்குவாரங்களுக்கு மத்தியில் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இராணுவமே பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதோடு, விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to வடக்கு மக்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்