Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏ.கே.கங்குலி மீதான புகாரைப் போன்று இன்னுமொரு ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மீதும் தொடுக்கப்பட்டுள்ள  பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியவர் ஸ்வாதேந்தர் குமார். இவர் மீது சட்டக் கல்வி பயிற்சி பெற்று வரும் பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார்.

ஆனால் இதை முற்றாக மறுத்துள்ள ஸ்வாதேந்தர் குமார், இப்புகார் முற்றிலும் போலியானது. தவறானது. எனக்கு அப்பெண்ணைக் கூட ஞாபகம் இல்லை. அவர் என்னிடம் தான் பயிற்சி பெற்றாரா என்பது கூட எனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார்.

மேலும் அப்பெண் சட்டப் பயிற்சியாளரின் வாக்குமூலத்தை பிரசுரிக்கவெண்டாம். அவர் என்ன வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்பது பற்றி எனக்கு எத்தகவலும் தெரியவில்லை. இதைப் பிரசுரித்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

குறித்த பெண் பயிற்சியாளர் காவல்துறையினரிடம் கொடுத்துள்ள புகாரில், கடந்த 2011 மே-ஜூன் இடைப்பட்ட காலத்தில் ஸ்வதேந்தர் குமார் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், பாலியல் ரீதியாக தொட்டு, ஹோட்டலில் தன்னுடன் வந்து தங்குவதில் சிக்கல் ஏதும் இல்லை தானே என விசாரித்ததாகவும்  கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வதேந்தர் குமார் தற்சமயம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவர் மீது  புகார் வழங்கிய பெண், கொல்கத்தாவின் தேசிய அரசியல் விஞ்ஞான கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். கடந்த டிசம்பர் 2013ம் ஆண்டு இவருடைய புகார் காவல்துறையினரிடம் பதியப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி மீது இதே போன்று பெண் சட்டக் கல்வி பயிற்சி பெறுனர் ஒருவர் முன்வைத்த் அபாலியல் புகாரை அடுத்து மேற்குவங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை ஏ.கே.கங்குலி இராஜினாமா செய்யும் நிலை தோன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்வதேந்தர் குமார் மீதும் பாலியல் புகார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com