லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராட்சி மையம் முடிவெடுத்துள்ளது. அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் ஒரு ஈழத் தமிழ் மாணவி. அவர் பெயர் "சிவேன் ஞானகுலேந்திரன்". இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமைபெற்றிருக்கிறார். அத்தோடு விண்வெளி ஆராட்சியிலும் ஈடுபட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த ஈழத் தமிழ் பெண்மனி வெகுவிரைவில் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார். அவ்வாறு செல்லும் பட்சத்தில் அவர் வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளார். விண்வெளிக்குச் செல்லும் முதலாவது ஈழத் தமிழ் பெண் இவராகத் தான் இருக்க முடியும். அவரின் ஆராட்சிகள் வெற்றிபெற நாங்களும் அவரை வாழ்த்துவோம்.

valthugal amma