டெல்லியில் இன்று இலங்கை-இந்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நேற்று முன்தினம் 165 தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. இந்த மீனவர்கள் இன்று 11 மணி அளவில் தேசிய கடற்படையினரிடம் ஒப்டைக்கப் பட்டனர். பின்னர் இவர்களை ராமேஸ்வரம்,அழைத்து வந்து, தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்க உள்ளனர் தேசிய கடற்படையினர் என்றும் தெரிய வருகிறது.
இந்நிலையில் இன்று டெல்லி வந்துள்ள இலங்கை மீனவளத்துறை அமைச்சர், இந்திய மீனவளத்துறை அமைச்சர் சரத் பவாரை சந்தித்து பேச உள்ளார் என்றும், இரு நாட்டு அமைச்சர்களும், இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனை குறித்தும், இரு நாட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிப்பது குறித்தும் பேச உள்ளனர் என்று தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மீன் பிடிக்க கடலுக்குள் சென்று இருந்த ராமேஸ்வரம் கோடியக்கரை மீனவர்களை நடுக்கடலில் வழிமறித்து இலங்கை கடற்படையினர் கற்களால் தாக்கி வலைகளை கிழித்து சேதப்படுத்தி உள்ளனர் என்று மீனவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கை-இந்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை!