டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் - ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ வினோத் குமார் பின்னி இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு டெல்லியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான எவரும் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்ததை அடுத்தே வினோத் குமார் பின்னி அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மகிழ்ச்சி அளிக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது' என எம்.எல்.ஏ வினோத் குமார் பின்னி அதிரடியாக அறிவித்திருந்தார்.
நாங்கள் மக்களுக்கு சொன்னதற்கும், இப்போது செய்து கொண்டிருப்பதற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. எங்களது அதிருப்தியை நாளை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெளிப்படுத்தவிருக்கிறோம். மூடிய கதவுக்குள் இவை மௌனமாக்கப்பட்டு விடக் கூடாது என பின்னி தெரிவித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வினோத் குமார் பின்னி, லோக்பால் போராட்டத்தின் போது ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து கொண்டார். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான் கமிட்டியின் 9 அங்கத்தவர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில் வினோத் குமார் பின்னி இவ்வாறு ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கருத்துக்கள் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதற்கு பதில் அளித்துள்ள அர்விந்த் கேஜ்ரிவால், கடந்த டிசம்பர் மாதம் வினோத் குமார் பின்னி தனக்கு அமைச்சுப் பதவி வேண்டும் என என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். அதனால் லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக தெரிவித்தார். ஆனால் தற்போது எம்.எல்.ஏக்களாக இருக்கும் எவருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்குவதில்லை என கட்சி முடிவெடுத்திருக்கிறது என்றார்.
இக்கோபத்தின் வெளிப்பாடே வினோத் குமார் பின்னியின் தற்போதைய கருத்துக்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதை முற்றாக மறுத்துள்ள வினோத் குமார் பின்னி, நாங்கள் அமைச்சர்களாவதற்கோ, முதலமைச்சர் ஆவதற்கோ இங்கு வரவில்லை. மக்களுக்கு ஏவை செய்யவே வந்திருக்கிறோம். குமார் விஸ்வாஸுடன் எனது சந்திப்பு வழமையாக நடைபெறுவது தான் என்றார்.

0 Responses to அர்விந்த் கேஜ்ரிவால் - வினோத் குமார் பின்னி : தொடரும் முறுகல் நிலை