ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நேற்றையதினம் இந்த வருடத்தின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இருந்தார்.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பின் போது, இலங்கை விடயம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அனுமதிக்கப்பட்ட ஊடக ஸ்தாபனமான இன்னர் சிட்டி பிரஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பான் கீ மூனின் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பா விடயங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது கண்ட தோல்வி போன்றவிடயங்களை உள்ளடக்கிய கேள்விகளை இன்னர் சிட்டி பிரஸ் முன் கூட்டியே வழங்கி இருந்தது.
ஆனாலும் இந்த கேள்விகள் எதுவும் பான் கீ மூனினால் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இவ்வாறு இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு பான் கீ மூன் பல சந்தர்ப்பங்களில் பதில் வழங்காது விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாங் கீ மூனின் உரையில் இலங்கை விடயம் புறக்கணிப்பு - இன்னர் சிட்டி பிரஸ்