விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசாங்கள் புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று யுத்தக் குற்றங்களுக்கான அமெரிக்காவின் தூதுதுவர் ஸ்டீவன் ஜே ரெப், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறாம் திகதி இருவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வளித்து வருவதாக கோட்டாபய, ஸ்டீவன் ரெப்பிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த ரெப், அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியமைக்கு பதிலாக, சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் முன்னால் அவர்களை நிறுத்தி அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப அவர்களை விடுவிப்பதா? அல்லது புனர்வாழ்வளிப்பதா? என்பது தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளது.
எனவே விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட விடயத்தை அரசாங்கம் தப்பித்துக் கொள்ளும் காரணியாக முன்வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to விடுதலைப் புலிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஸ்டீவன் ஜெ ரெப்