இந்திய துணைதூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகேட் மீது நீதிமன்ற நடவடிக்கையை துவக்கி உள்ள அமெரிக்கா, அவரை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தேவ்யானிக்கு அளிக்கப்பட்ட தூதர் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள இந்தியா மறுத்ததை தொடர்ந்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் இன்று இரவு தேவ்யானி இந்தியா திரும்ப உள்ளார்.
இந்த நிலையில் அவர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
விசா முறைகேடு புகார்: இந்தியாவிற்கான அமெரிக்த துணை தூதரக அதிகாரியாக இருப்பவர் தேவ்யானி கோப்ரகேட். இவர் வீட்டு பணிப்பெண்ணிற்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் தராமல் இருந்ததாகவும், அவரை பணியமர்த்துவதற்காக தேவ்யானி விசா முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.
இதனையடுத்து டிசம்பர் 12ம் தேதி தேவ்யானி, அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேவ்யானியை இவ்வழக்கில் இருந்து காப்பாற்ற இந்தியா பல வழிகளிலும் முயற்சி செய்தது.
அமெரிக்க சட்டப்படி கைது செய்யப்பட்ட ஒருவர் மீது, 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி ஜனவரி 13ம் தேதி தேவ்யானி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற நடவடிக்கையை துவக்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.
இந்தியா கோரிக்கை: இந்நிலையில் ஜனவரி 8ம் தேதி, தேவ்யானியை இந்தியாவிற்கான ஐ.நா.,குழுவின் நிரந்தர உறுப்பினராக நியமித்து, அவரது பாதுகாப்பை அதிகரித்தது. தேவ்யானியின் பாதுகாப்பு அதிகரிப்பட்டதை அடுத்து அவரை வழக்கில் இருந்து விடுவிக்கவும் இந்தியா சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
ஆனால், தேவ்யானி கைது செய்யப்பட்ட போது அவர் ஐ.நா., குழு உறுப்பினர் பதவியில் இல்லை எனவும், குறிப்பிட்ட அளவே சலுகைகளை பெற்றிருந்ததாகவும் கூறிஅவரை விடுவிக்க அமெரிக்கா மறுத்தது.தேவ்யானி மீது விசா மோசடி மட்டுமின்றி,நியூயார்க் கோர்ட்டில் விசாரணையின் போது அமெரிக்க வழக்கறிஞர் ப்ரீத் பராராவிடம் பொய்யான வாக்குமூலங்களை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
தேவ்யானி மீதான 2 குற்றச்சாட்டுக்களுக்கும் அவருக்க அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர் பராரா, நியூயார்க் கோர்ட்டில் வாதம் செய்துள்ளார். தன் மீதான உண்மை தன்மையை நிரூக்க மேலும் 30 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என தேவ்யானி சார்பில் அமெரிக்க கோர்ட்டில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமெரிக்க சட்டப்படி வாதியின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என அமெரிக்க கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்தியா எவ்வளவோ முயற்சி செய்தும் தேவ்யானியை வழக்கில் இருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை.
நடவடிக்கைகளை துவங்கி உள்ள அமெரிக்கா, தேவ்யானியின் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு இந்தியாவிடம் கூறியது. அதற்கு இந்தியா மறுத்ததை தொடர்ந்து, தேவ்யானி அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தேவ்யானி மீதான குற்றச்சாட்டுக்கள் விலக்கிக் கொள்ளப்படாது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. உரிய நேரத்தில் தேவ்யானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், பிரதிவாதி மீண்டும் அமெரிக்கா திரும்பும் போது அவருக்கு எவ்வித அந்தஸ்தும் கொடுக்கப்பட மாட்டாது எனவும் அமெரிக்க வழக்கறிஞர் கோர்ட்டில் கூறி உள்ளார்.
தேவ்யானி மறுப்பு: நாட்டை விட்டு வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டிருந்த போதும் தன் மீதான உண்மை தன்மையை நிரூபிக்காமல் அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாது என தேவ்யானி தெரிவித்துள்ளார். இது பற்றி தேவ்யானியின் வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் கூறுகையில், தேவ்யானி குற்றமற்றவர்; அவர் மீது வீணாக பழி சுமத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

0 Responses to தேவ்யானி அமெரிக்காவை விட்டு வெளியேறப் பணிப்பு