என்னை ஓர் அரசாங்க உத்தியோகத்தர் என்பதை மறந்து போராளியாக அரசு கற்பனை செய்கின்றது. நான் மூன்று மாவட்டங்களில் 21 வருடங்களாக முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியுள்ளேன். இவ்வாறிருக்கும் போது என்னை ஒரு போராளியாகக் கருதி புனர்வாழ்வளிக்க முனைவது வேடிக்கையான ஒரு விடயம்.
இறுதி யுத்தத்தின் போது நான் கணவர், பிள்ளைகளுடன்தான் சரணடைந்தேன். அந்த நேரத்தில் கணவரிடமிருந்து பிள்ளைகளையும் என்னையும் பிரித்து கணவரை புனர்வாழ்வளிப்பதாக அழைத்துச் சென்றார்கள்.
நானும் பிள்ளைகளும் நிர்க்கதியானோம். ஆனால், இப்போது மாத்திரம் எனக்குப் புனர்வாழ்வளிக்க முனைவது திட்டமிட்ட செயலாகும். அவ்வாறு நான் போராளி என்று கருதியிருந்தால் எனது கணவருடன் என்னையும் புனர்வாழ்வுக்கு அழைத்திருக்கலாம்.
ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் சாதாரண பெண்ணாகத் தெரிந்த நான். இப்போது மாத்திரம் ஏன் போராளியாகத் தெரிய வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகிறது.
கேள்வி: உங்களைக் கைது செய்து புனர்வாழ்வளிக்க அரசு ஆலோசித்து வரு வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் உங்களுக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளதா?
பதில்: எனக்கு நேரடியாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஊடகம் ஒன்றுதான் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, என்னைக் கைது செய்து புனர்வாழ்வளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
என்னை அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளது. அதாவது என்னை ஓர் போராளி என்று அவர்கள் எண்ணியிருக்கின்றார்கள். நான் சாதாரண மானவள். இப்போது வடமாகாண சபை உறுப்பினராக உள்ளேன்.
என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்து வருகின்றேன். இவைதான் எனது அடையாளங்கள். ஆனால் அரசு என்னை முன்னாள் போராளி என்று தவறாகப் புரிந்து வைத்துள்ளது என்று நினைக்கின்றேன்.
கேள்வி: நீங்கள் அரச சேவையில் இணைந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணியாற்றியுள்ளீர்கள். அவ்வாறு இருக்கும் போது நீங்கள் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகக் குற்றம் சாட்டப் படுகிறதே?
பதில்: என்னுடைய நிலை தெரியாமல் தான் இவ்வாறு தெரிவிக்கின்றார்கள். அதாவது நான் ஓர் அரச பணியாளராக கடமையாற்றிய விடயம் அரசாங்கத்துக்கு தெரியவில்லை என்று நான் நினைக்கின்றேன். அது மட்டுமன்றி, இவ்வளவு காலமும் முன்னாள் போராளிகளுக்குத்தான் புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றது என்று நான் எண்ணியிருந்தேன்.
ஆனால், இப்போதுதான் தெரிகின்றது சாதாரண தமிழ் மக்கள் அனைவருக்குமே புனர்வாழ்வளிக்க முனைகின்றார்கள் என்பது. என்னை ஓர் அரசாங்க உத்தியோகத்தர் என்பதை மறந்து போராளியாக அரசு கற்பனை செய்கின்றது.
நான் மூன்று மாவட்டங்களில் 21 வருடங்களாக முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றியுள்ளேன். இவ்வாறிருக்கும் போது என்னை ஒரு போராளியாகக் கருதி புனர்வாழ்வளிக்க முனைவது வேடிக் கையான ஒரு விடயம்.
இறுதி யுத்தத்தின் போது நான் கணவர், பிள்ளைகளுடன்தான் சரணடைந்தேன். அந்த நேரத்தில் கணவரிடமிருந்து பிள்ளைகளையும் என்னையும் பிரித்து கணவரை புனர்வாழ்வளிப்பதாக அழைத்துச் சென்றார்கள். நானும் பிள்ளைகளும் நிர்க்கதியானோம்.
ஆனால், இப்போது மாத்திரம் எனக்குப் புனர்வாழ்வளிக்க முனைவது திட்டமிட்ட செயலாகும். அவ்வாறு நான் போராளி என்று கருதியிருந்தால் எனது கணவருடன் என்னையும் புனர்வாழ்வுக்கு அழைத்திருக்கலாம். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் சாதாரண பெண்ணாகத் தெரிந்த நான், இப்போது மாத்திரம் ஏன் போராளியாகத் தெரிய வேண்டும்.
நான்கு ஆண்டுகள் கடந்தும் புனர்வாழ்வளிக்க அழைத்துச் சென்ற எனது கணவரின் நிலை என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. நான் போகாத இடமில்லை. பார்க்காத அதிகாரிகள் இல்லை. இருந்தும் எனது கணவர் தொடர்பில் எனக்கு இன்றுவரை எந்தத் தகவலும் தெரியவில்லை.
இப்போது என்னையும் அந்த நிலைக்கு உட்படுத்த முனைகின்றார்கள். எனது உயிர் தொடர்பிலோ, பாதுகாப்புத் தொடர்பிலோ எனக்குக் கவலையில்லை. எனது பிள்ளைகள் பற்றிச் சிந்திக்கும் போது துக்கம் தாங்க முடியவில்லை.
தந்தையில்லாமல் அவர்கள் தவித்த தவிப்பை நான் நேரில் கண்டுள்ளேன். இப்போது நானும் இல்லை என்றால் அவர்களது நிலைமை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கும், என்னை அரசியலுக்கு கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும், எனது வெற்றிக்காக பெருமளவில் வாக்களித்த வடமாகாண மக்களுக்கும் இந்த அரசாங்கம் புனர்வாழ்வை வழங்கப் போகின்றதா?
இறுதியாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்கப் போகின்றதா என்பதுதான் எனது கேள்வி.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமை மாநாடு தொடர்பான அச்சுறுத்தல் செயற்பாடென்றே நான் இதனைக் கருதுகின்றேன்.
தென்பகுதியில் வாழ்கின்ற இனவாதத் தலைமைகளை தேச பக்தர்களாக காட்டிக் கொள்ளும் இலங்கை அரசு, மனித உரிமைகள் தொடர்பில் நியாயமான கருத்துக்களைத் தெரிவிக்கும் என்னை பிரிவினைவாத சக்தியாக சிங்கள மக்களிடம் காட்ட முனைவது மிகவும் வேதனை தரும் செயலாகும்.
ஏனெனில் எனக்கு சிங்கள, முஸ்லிம் நண்பர்கள் அதிகமானோர் இருக்கின்றார்கள். இன்று நான் வீதிக்கு வந்து மனித உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கும் போராடுவதற்கும் காரணமாக இருந்தவர்கள் எனது சிங்கள, முஸ்லிம் சகோதரர்கள்தான். இதனை உணர்ந்து கொள்ளாத அரசு என்னை ஓர் பிரிவினைவாதியாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்த முனைகின்றது.
கேள்வி: யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களாகி விட்டன. அத்துடன் நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்று வடமாகாண சபை உறுப்பினராகி விட்டீர்கள். இந்நிலையில் இப்போது உங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதுவதற்கு காரணம் என்ன?
பதில்: இப்போது அரசாங்கம் என்னைப் பார்த்து அச்சம் கொள்கின்றது என்றே நான் கருதுகின்றேன். ஆரம்ப காலத்தில் அரசாங்கத்தால் நான் தொடர்ச்சியான இன்னல்களைச் சந்தித்து வந்தேன்.
அதாவது, 1989 ஆம் ஆண்டில் காங்கேசன்துறையிலிருந்து நானும் எனது குடும்பத்தினரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டோம். 23 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் நான் எனது சொந்த இடத்துக்குச் செல்ல முடியாத நிலைமையில் இருக்கின்றேன்.
அதன் பின்னர், எனது கணவரை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு அவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது கூடத் தெரியாமல் கிளிநொச்சியில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தபோது, அங்கும் எனது வீடு தகர்க்கப்பட்டு நிர்க்கதியான நிலைக்கு உள்ளாக்கப்பட்டேன்.
எனது அரச உத்தியோகத்துக்கான இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்தபோது அரசும் அரச அதிகாரிகளும் கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் என்னை அலையவிட்டு அலைக்கழித்தார்கள்.
உளவியல் ரீதியில் நான் பெரும் தாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டேன். அப்போதெல்லாம் போராளியாகத் தெரியாத நான், இப்போது மாகாண சபை உறுப்பினராக பதவி ஏற்ற பின்னர் இந்த அரசுக்கு போராளியாகத் தெரிகின்றேன்.

0 Responses to என்னை ஓர் போராளியாக அரசு கற்பனை செய்வது ஏன்? - அனந்தி