Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா கூட்டத்தினில் அனைத்து பங்கு கட்சிகளும் ஒன்று கூடி எடுத்த தீர்மானத்தினை தாண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மஹிந்தவிற்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடக்கில் தற்போதைய நிலைமை, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் யோசனைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுக்கூட்டம் என்பன தொடர்பில் இதன்போது இரு தரப்பிரனரிடையே ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தெற்கு சிங்கள தேசிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளினில் சுமந்திரன் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைமையிலான விசேட குழுவொன்று பெப்ரவரி மாதம் முதலாம் வாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெனீவா கூட்டத்தொடரினை வழமை போன்றே பிசுபிசுக்க வைக்கும் கூட்டமைப்பின் நாடகம் இம்முறையும் அதன் பின்னர் அரங்கேறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to மீண்டும் பல்டி அடிக்கின்றது கூட்டமைப்பு! மஹிந்தவை விரைவில் சந்திக்கிறதாம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com