Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி தேவயானி விவகாரத்தில் அமெரிக்க அரசு கெடுபிடிகளைத் தீவிரமாக்கி உள்ள நிலையில்,  அமெரிக்க அரசுடனான எரிசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது இந்தியா.

கடந்த மாதம், பணிப்பெண் விசா முறைகேடு விவகாரத்தில் தேவயானியை கைது செய்து, கடுமையாகவும் மிக அவமானகரமாகம் அமெரிக்கா நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அமெரிக்க தூதரக தொடர்பான அரசு சலுகை விஷயத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேவயானி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு தொடுத்து இருந்த மனு இன்று தள்ளுபடியாகி உள்ளது. வருகிற 13ம் திகதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதனால் இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அமெரிக்க அரசு கெடுபிடிகளை விதித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் டெல்லியில் நடக்க இருந்த அமெரிக்க அரசுடனான எரிசக்தி தொடர்பான பேச்சு வார்த்தையை தற்போது இந்தியா இரத்து செய்துள்ளது.

0 Responses to அமெரிக்க அரசுடனான எரிசக்தி தொடர்பான பேச்சு வார்த்தையை ரத்து செய்தது இந்தியா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com