Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏற்கனவே அமெரிக்காவின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான பிரதிநிதி ஸ்டீவன் ஜே ரெப் இலங்கைக்கு விஜயம் செய்து, பல சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்றைய தினம் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரின் எறிகனை வீச்சுக்களால் கொல்லப்பட்ட பொது மக்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

'2009ம் ஆண்டு யுத்தத்தில் இராணுவத்தினரின் தாக்குதலில் கொள்ளப்பட்ட மக்கள் ' என்ற வாசகத்துடன் இந்த புகைப்படத்தை அமெரிக்க தூதரகம் தமது டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன் 2009ம் ஆண்டு அரசாங்கத்தினால் யுத்த சூனிய வலயம் என அறிவிக்கப்பட்டிருந்த பகுதியின் புகைப்படங்களையும் தூதரகம் தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கத்தின் மத்தியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

0 Responses to இலங்கை அரசாங்கத்தை யுத்தக் குற்றவாளிகளாக அடையாளப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com