வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நிதிகளை வடமாகாணத்துக்கு கொண்டு செல்வதற்கான விசேட திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது. இதற்காக திறைசேரியின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தரவுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த மக்கள் வடமாகாண அபிவிருத்திக்கான நிதிகளை வழங்க முன்வந்துள்ளனர். எனினும் இதனை உள்நாட்டிக்கு கொண்டு வருவதில் காணப்பட்ட சிக்கல்கள் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்ததாக சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, திறைசேரியின் ஊடாக இந்த நிதியினை வடமாகாணத்துக்கு கொண்டுசெல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to புலம்பெயர் தமிழ் மக்களின் நிதிகளை வடக்கிற்கு கொண்டுவர விசேட திட்டம் விரைவில்!