Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிராக இம்முறை nஐனிவாவில் கடுமையானதொரு பிரேரணை கொண்டுவரப்படாலாமென எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு கொண்டு வரப்படவுள்ள தீர்மானமானது சர்வதேச விசாரணையாகவே அமையுமென தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளாh.; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். இந்தப்பிரேரணைக்கு ஆதரவு கோரி புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை கூட்டமைப்பு தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு தகுதியற்ற அரசாகவே ஆட்சியிலிருக்கின்ற மகிந்த அரசாங்கம் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த நாட்டில் காலம் காலமாக ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கங்களும் இதே போன்றே செயற்பட்டுள்ளதென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை இடம் பெற்ற பத்தரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கருத்து வெளியிடுகையிலையே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

இங்கு கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவையுயும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அரசாங்கம் சர்வதேசத்திற்குப் பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருகின்றது.
இதற்கு மாறாக யுத்தம் முடிவடைந்த பின்னர் தொடர்ந்தும் காணி ஆக்கிரமிப்புக்கள் இரானுவ முகாம்களை அமைத்தல் மற்று தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஆகிய செயற்பாடுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இந் நிலையில் அடுத்தமாதம் nஐனீவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திலிருந்து தப்புவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது.

அதாவது யுத்த கணக்கெடுப்புக்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக பொய்யான தகவல்களைத் திரட்டி nஐனீவாவிற்கு கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமையவே காணமல் போனவர்கள் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பொய்யான தகவல் திரட்டினை மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் அரசு நியமித்துள்ள காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு கூட கண்துடைப்பே. ஏற்கனவே அரசின் மனிதவுரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றினில் மக்கள் புகார் செய்துள்ளனர்.முதலில் அதற்கு என்ன நடந்ததென்பதை இக்குழு விசாரிக்கட்டுமென்றார்.
தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அரசினால் எதிராக இழைக்கப்பட்டுள்ள அல்லது இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளுக்கு சர்வதே விசாரணையே இங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய விசாரணையொன்றே இம்முறை nஐனிவாவில் கொண்டு வரப்படவுள்ளதாக நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 Responses to ஜெனீவாவில் இம்முறை சர்வதேச விசாரணையே! சுரேஸ் பிறேமச்சந்திரன் நம்பிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com