பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். 86 வயதாகும் இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார்.
23 ம் திகதி ஐப்பசி மாதம் 1928 ம் ஆண்டு காக்கிநாட மாவட்டத்திலுள்ள பெட்டபுரத்தில் பிறந்த அஞ்சலி தேவி, தனது 8வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவர் 'கொல்ல பாமா' எனும் படத்தில் C.புல்லையாவினால் மோகினி எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அன்றிலிருந்து வெற்றிநடை போட்ட அஞ்சலி தேவி 5௦௦க்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 40 களிலும் 50 களிலும் எல்லா பிரபலமான நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
1940யில் ஆதிநாராயண ராவ் என்ற இசையமைப்பாளரை திருமணம் தெய்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சத்திய சாயி பாபாவின் பக்தையான அஞ்சலி தேவி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பொன்னான காலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த நடிகை ஆவார். தமிழில், மணாளனே மங்கையின் பாக்யம், கணவனே கண்கண்ட தைய்வம், லவகுசா, அடுத்த வீட்டுப் பெண், நிரபராதி, சர்வாதிகாரி, அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் அஞ்சலி தேவி.

0 Responses to தழிழ் - தெலுங்கு சினிமாவின் ஒப்பற்ற நடிகை அஞ்சலி தேவி காலமானார்