Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனந்திக்குப் புனர்வாழ்வளிப்பதெனும் சதி முயற்சி பற்றி எச்சரித்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன்.அனந்தி சசிதரன் கைதுசெய்யப்பட்டாலோ, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டாலோ இலங்கை அரசாங்கம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

அனந்தி சசிதரன் தனிநபர் அல்ல, அவர் வடகிழக்கு மாகாணத்தில் மக்கள் பலம் மிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்,அதற்கு மேல் போரின் இறுதியில் தன்னுடைய கணவரை படையினரிடம் ஒப்படைத்த பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பதே தெரியாத நிலையில் தன் 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

எனவே தன்னுடைய பிரச்சினை தொடர்பாகவும், தன்னைப் போன்றே பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாகவும் பேசும் உரிமை அவருக்கு இருக்கின்றது.அதனை அவர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பேசலாம். அதற்காகவே அவரை 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளால் தமிழ் மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள்.எனவே அவருடைய ஜனநாயக உரிமையினை தடுக்கும் உரிமை இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது.

அவ்வாறு அவருடைய அடிப்படை உரிமையும், ஜனநாயக உரிமையும் பறிக்கப்படுவதனை சர்வதேச நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எனவும் இலங்கை அரசாங்கம் நினைத்துவிடக்கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது விசாரணை, கைது, புனர்வாழ்வு என எது நடந்தாலும் அதற்கான மோசமான பின்விளைவினை இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.

மேலும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையில் மோசமான பிரிவினைகளை வளர்க்கும் என்பதையும் இலங்கை அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை இனவாத ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to அனந்திக்குப் புனர்வாழ்வு! சீற்றத்தினில் கூட்டமைப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com