காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில் இன்றைய தினம் கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து வழங்கப்பட்டிருந்த 36 முறைபாடுகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டது.
ஆணைக்குழு கரச்சி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கூடி இருந்ததுடன், முன்னர் ஆணைக்குழுவில் முறைபாடு தெரிவிக்க முடியாது போனவர்களின் முறைபாடுகளையும் பதிவு செய்துக் கொண்டது.
இந்த ஆணைக்குழு எதிர்வரும் 21ம் திகதி வரையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று விசாரணைகளை நடத்தவுள்ளது.
இதற்கு இதுவரையில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் பெரும்பாலான முறைபாடுகள் இலங்கையின் பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to கிளிநொச்சியில் காணாமல் போன 36 முறைப்பாடுகள் தொடர்பில் இன்று விசாரணை