காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்நாட்டு பாதுகாப்புக்கு என இந்திய இராணுவம் அங்கு தொடர்ந்து நிலை நிறுத்தப்பட வேண்டுமா என்பதை மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தான் தீர்மானிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது பிரஷாந்த் பூஷனின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார். பாஜக, காங்கிரஸ் இரண்டுமே பிரஷாந்த் பூஷனின் கருத்துக்கு தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி, 'தேசிய பாதுகாப்பு என்பது வாக்கெடுப்பின் மூலமாகவோ, அல்லது மக்கள் அபிலாஷைகளின் மூலமாகவோ தீர்மானிக்கப்பட முடியாத ஒன்று. அது பாதுபாக்கு அக்கறையில் மாத்திரமே திரிமானிக்கப்பட கூடியது என்றார். ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் நிலவிவருவதால் அங்கு இராணுவப் பிரசன்னம் இன்றியமையாதது எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சேய் ஜா கருத்து தெரிவிக்கையில், ஆம் ஆத்மி கட்சி தான் ஒரு அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் போன்றோ, சமூக ஆர்வலர் போன்றோ இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் தற்போது ஒரு அரசியல் கட்சி. எனவே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கருத்து தெரிவிக்கும் முன்னர் அதை பற்றி நன்கு தீவிரமாக ஆலோசித்து தமது கருத்துக்களை கூறவேண்டும் என்றார்.

0 Responses to எல்லையில் இராணுவம் தொடர்ந்து தேவையா? : பிரஷாந்த் பூஷனின் கேள்விக்கு கடும் கண்டனம்