Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருமணத்திற்கு முன்பான பாலியல் உறவு ஒழுக்கமற்றது எனவும், எந்தவொரு மதமும் அதனை அனுமதிக்கவில்லை எனவும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விரேந்தர் பாத் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஊடக கவனம் பெற்றுள்ளன.

திருமணத்திற்கு முன்பான பாலியல் உறவு இந்தியவில் இன்னமும் கலாச்சார சீரழிவு சார்ந்த விடயமாக பார்க்கப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் ஜோடி ஒன்று இணைந்து வாழ்வது என்பது ஒழுக்கமற்றது என கடந்த வருடம் டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதோடு மேற்குலக கலாச்சாரத்தை இங்கு பிரபலப்படுத்த முனைய வேண்டாம் எனவும் கூறியிருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் நீதிபதி பாத் முன்னிலையில் வழக்கு ஒன்று வந்தது. 2011 இல் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பெண் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 29 வயதான நபர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கிய பிறகே தன்னுடன் குறித்த நபர் பாலியல் உறவு கொண்டதாக அப்பெண் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி விரெந்தர் பாத், திருமணத்திற்கு முன்னரே அப்பெண்ணுடன் உறவு கொண்டு, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கொடுத்திருந்த வாக்குறுதியை ஒரு நபர் நிறைவேற்றாது போனால் அதை பாலியல் வல்லுறவாக எடுத்துக் கொள்ள முடியாது.

இதன் விளைவுகள் குறித்து குறித்த பெண்ணே அவதானமாக இருந்து அதற்கேற்றால் போல் செயற்பட்டிருக்க வேண்டும். இது ஒழுக்கமற்ற செயல் என்பது மட்டுமல்ல, எந்த மதங்களும் இதனை ஏற்கவில்லை என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணத்திற்கு முன்பான பாலியல் உறவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பூ கருத்து தெரிவித்ததற்கு கடும் கண்டனம் எழுந்தததுடன் அவருக்கு எதிராக 22 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. எனினும் 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்திருந்தது. திருமணம் செய்யாமல் ஜோடியாக ஒன்றாக வாழ்வதற்கு உரிமை இருக்கிறது எனவும் அப்போது உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது.

Indian judge says pre-marital sex 'against religion'

0 Responses to திருமணத்திற்கு முன்னரான பாலியல் உறவு மதத்திற்கு எதிரானது, ஒழுக்கமற்றது:டெல்லி நீதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com