ஆளுநர் சந்திரசிறியின் தன்னிச்சையான அண்மைய அரச நியமனங்களை தற்காலிகமாக இடைநிறுத்த வடக்கு மாகாணசபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.நடப்பாண்டிற்கான முதலாவது கூட்டம் இன்று பேரவை கட்டடத்தொகுதியினில் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையினில் இடம்பெற்றிருந்தது.அவ்வேளையினில் அண்மைக்காலமாக அதுவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை ஆட்சி பீடமேறிய பின்னரும் முறையற்ற வகையினில் ஆளுநர் சந்திரசிறியினால் வடமாகாணசபையினில் நியமனங்கள் வழங்கப்படுகின்றமை தொடர்பான விடயம் சூடு பிடித்திருந்தது.
இதையடுத்தே ஆளுநரால் வழங்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத ஆளணி நியமனங்கள் அனைத்தினையுமே உடனடியாக ஏகமனதாக வடமாகாணசபை தீர்மானத்துள்ளது.குறிப்பாக ஆளுநரது பணிப்பினில் முன்னெடுக்கபட்டு வரும் உள்ளுராட்சி மன்றங்களிற்கான ஆட்சேர்ப்பினையும் தடுத்து நிறுத்தவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே வடக்கு மாகாணசபை அமர்வு களில் இதுவரை நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானங் களுக்கும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங் களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கும் இதுவரை பதில் எது வும் வழங்கப்படவில்லை என்றும் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பினர்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதன் முறையாக நடத்தப்பட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தச் சபையை பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.இதுவரை வரவு செலவுக் கூட் டத் தொடர் உள்ளிட்ட மூன்று கூட்டத் தொடர்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று கூட்டத் தொடர்க ளிலும் பல்வேறு உறுப்பினர் களாலும் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய திணைக்களங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு திணைக்களத்தினாலும் மாகாணசபைக்குப் பதில் வழங்கப்படவில்லையென தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.

0 Responses to ஆளுநரது நியமனங்கள் உடனடியாக இடைநிறுத்தம்! வடக்கு மாகாணசபையினில் தடாலடி தீர்மானம்!!