Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி யுத்தத்தினில் ஆகக்குறைந்தது ஒரு இலட்சத்து 45 ஆயிரம் மக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.அவர்களது மரணத்திற்கு பதில் சொல்லாது இலங்கை அரசு தப்பித்து விடமுடியாதென புள்ளி விபரங்களுடன் போட்டுடைத்துள்ளனர் மன்னார் மற்றும் யாழ்.ஆயர்கள். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உங்களிடம் தெரிவித்தமையினால் என்னைக்கொலை செய்கிறார்களோ தெரியவில்லை எனவும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். சந்திப்பு தொடர்பில் பதிவு இணையத்தின் யாழ் செய்தியாளர் தெரிவிக்கையில்:

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப்புடன் யாழ். ஆயர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றிருந்தது.

முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றினில் சிவில் சமூகப்பிரதிநிதிகளை அவர் சந்தித்து பேச்சுக்களை நடத்தினார்.அதை தொடர்ந்து குடாநாட்டிலுள்ள நாளிதழ் அலுவலகமொன்றிற்கு விஜயம் செய்த அவர் அதை தொடர்ந்து யாழ்.ஆயர் இல்லத்தினில் ஆயர்களை சந்தித்து பேசினார்.

அதை தொடர்ந்து மீண்டும் அதே விடுதியினில்  கூட்டமைப்பு வடமாகாணசபை அங்கத்தவரும் காணாமல் போனோர் சார்பினில் குரல் எழுப்பி வருபவருமான அனந்த சசிதரனை சந்தித்த அவர் மீண்டும் ஆயர் இல்லத்தினில் நீதிக்கும் சமாதானத்திற்குமான நல்லெண்ண குழு வினரை சந்தித்துப்பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதை தொடர்ந்து வடமாகாண ஆளநரை சந்தித்த அவர் இரவு வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்து இரவு உணவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

ஆயர் இல்ல சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கருத்துத் தெரிவிக்கையில், ஜெனிவாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் 2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவினால் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது என்றார்.

இதனிடையே போர்க்குற்றங்கள் குறித்த உண்மையை அறிய சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மத்தியில் உள்நாட்டு செயற்பாட்டில் நம்பிக்கையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச விசாரணையானது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்கும்.

போர்க்குற்றங்கள் என்ற பெயரில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், ஒத்துழைக்க மறுக்கும் நிறுவனங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் கூட முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், சட்டத்திற்கு புறம்பான ஆயிரக்கணக்கான கொலைகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாமல் உள்ளனர் எனவும் ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் உள்ளன. காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், சட்டவிரோதமாக காவலலில் வைத்து சித்திரவதை செய்யப்படுபவர்கள் குறித்து என் மாவட்டத்தில் வாழும் மக்களின் உண்மையான அபிலாஷைகளை கருத்தில் கொண்டு ஆன்மீக மற்றும் மத நோக்கத்துடன் பேசி வருகிறேன்.

வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பாலியல் பலாத்காரம் தொடர்பில் பெண்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது.

இராணுவத்தினர் நிலங்களை கைப்பற்றி உள்ளனர். சிறையில் பலர் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகளவில் உள்ளது.

தேவாலயங்களில் உள்ள பிரதிநிதிகள் உட்பட எவரும் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாத நிலைமையில் அச்சத்துடனும் பாதுகாப்பற்ற நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.தமிழ் பகுதிகளில் காலனி ஆதிக்கம் காணப்படுகிறது. மொழி, கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் இல்லாத தென் பகுதி பெருபான்மையினரின் ஆதிக்கம் தமிழ் பகுதிகளில் உள்ளது.

இலங்கையில் பெருபான்மையினரின் மேலாதிக்கம் சிறுபான்மையினர் மீதுமு செலுத்தப்படுகிறது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மையான விசாரணைகளை செய்ய அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டி வருகிறது எனவும் மன்னார் ஆயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to இன அழிப்பு கொலைகளிற்கு இலங்கை அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com