புரட்சிக்காரன் என்றால் உலகம் அவனை கடினமாகவே எண்ணுகிறது, ஆனால் அவன் மனிதனுக்குள் மென்மையானவன், சாதுவானவன், அதனால்தான் அவன் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தாங்க முடியாதவனாக போராடப் புறப்படுகிறான்…. கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலில் வீரகாவியமாகிய பதினான்கு தோழர்களில் நினைவைத் தாங்கிய ‘விடிவிற்கு முந்திய மரணங்கள்’ நாவலுக்கு கிட்டண்ணா எழுதிய முன்னுரையின் தொடக்கவரிகள் இவை.
கிட்டண்ணா தன்னுள் கொண்டுள்ள போர் ஆற்றல் உலகம் அறிந்த ஒன்றே. ஆனால் அதையும் தாண்டி அவர் இதயத்தை அலங்கரித்த ஆன்மீக ஈடுபாடு, எவரையும் அன்பு செய்யும் பண்பு, மக்கள் துயர் கண்டு இரத்தக் கண்ணீர் வடிக்கும் அவரது மனது, இதற்கும் மேலாக வாய்பேசாப் பிராணிகளிடம் அவர் காட்டிய அன்பு எல்லோராலும் புரிந்து கொள்ளமுடியாது. போராட்டப் பாதையில் தனது இதயத்தின் பாதியை கடினமாக்கிக்கொண்ட போதிலும் மீதியை அவர் ஈரமாக்கியே கொண்டார் இயற்கையாகவே இரக்க சுபாவம் கொண்டவராகவே விளங்கினார்.
1987ம் ஆண்டு பங்குனி மாதம் 30ம் திகதி எதிர்பாராத விதமாக நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் தன் ஒரு காலினை இழந்தது அறிந்ததே. இதன் பிற்பாடு இந்தியா சென்று சிகிச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் அவர் இருந்த வீட்டுக்குள் சொறி பிடித்த நாய் நுழைந்து கொண்டது. கிட்டண்ணாவுடன் உதவிக்கு நின்ற போராளிகள் அவர் பேசிவிடுவார் என்று நினைத்து அந்த நாயைத் துரத்த முயன்றுகொண்டிருந்த வேளையில், அதனை அவர் கண்டுகொண்டார். உடனே அந்த நாயை கூட்டிவரச்சொன்னார். குளிப்பாட்டினார். அதன் உடல் மீது காணப்பட்ட புண்களுக்கு மருந்திட்டு சிகிட்சை அளித்தார். விரைவில் புண்கள் மாறி அது நன்கு குணமடைந்தது. அன்றிலிருந்து அது கிட்டண்ணாவின் உற்ற நண்பனாகிவிட்டது. கிட்டண்ணா உணவருந்தும் போதுதான் அது உணவருந்தும். எவ்வளவு நேரமாக இருந்தாலும் சரி அவருக்காக அது காத்திருக்கும். இவ்வாறாக அவர்களின் உறவுகள் வளர்ந்து கொண்டே சென்றது இருவரும் நல்ல நன்பர்களாய் இருந்தனர். காலங்கள் கழிந்தன.
1988 புரட்டாதி நடுப்பகுதியில் இந்திய காவல்துறையினரால் கிட்டண்ணா கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்படியான துரதிஷ்டமான நிகழ்வினை அது நினைத்துக் கூட பார்த்திருக்காது. அவரின் பிரிவுத் துயரை தாங்க முடியாமல் சோகத்துடன் அங்குமிங்கும் ஓடித்திரிந்து அவரைத் தேடியது. உணவு உன்ன மறந்தது. அவர் இருக்கும் இடத்தினை மோர்ந்து மோர்ந்து பார்த்து சோகத்துடன் ஒரு மூலையில் ஒதுங்கி அவ்விடத்திலேயே இறந்து போனது. சேது அறிந்த கிட்டண்ணாவும் மிகவும் வேதனை யடைந்தார். பிற்காலத்தில் அவர் மேற்குலகில் வாழ்ந்த காலத்தில் அழகான விதம்விதமான நாய்களை காணும் போதெல்லாம் அந்த நாயின் முகம் அவரின் மனக்கண்ணில் தோன்றி அவரின் இதயத்தை ஈரமாக்கும்.
இவை மட்டுமல்ல 1983ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்திய அரசு வழங்கிய இராணுவப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுக்கு இரண்டாவது பொறுப்பாளராக கிட்டண்ணா சென்றிருந்தார். அவர் காட்டிய அசாதாரண திறமை அதிகாரியை வியக்கவைத்தது. அதிலிருந்து அவர்களின் அன்பு மலரத்தொடங்கியது. பயிற்சியும் நிறைவு பெற்றது. அங்கிருந்து அனைவரும் வெளியேறுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தனர். எதையும் எதிர்பார்க்காத அன்பினை விதைக்கும் கிட்டண்ணாவின் உள்ளமோ சோகத்தில் மூழ்கிப்போயிருந்தது. பிரிவுத்துயரை தாங்க முடியாமல் தேம்பித் தேம்பி விம்ம தொடங்கியதையும் அந்த அதிகாரியும் கண்ணீர் மல்கிக்கொண்டு மெல்ல விடை கொடுத்ததையும் அவருடன் கூடச்சென்ற தோழர்கள் நினைவு கூறுவார்கள்.
போராட்ட வாழ்வில் மட்டுமல்ல இயற்கையாகவே தனது மனதை அன்பினால் நிரப்பி தூய்மையை போற்றி வாழ்ந்தவர். ஏழை மகளின் வாழ்வில் அக்கறை கொண்டிருந்தார். அவர்களின் வாழ்வு வளம்பெறவேண்டும் என்பதற்காக அயராது பணியாற்றினார். பின்னைய காலங்களில் போராட்டப்பணி தமிழீழத்திலிருந்து வெகு தூரத்திற்கு அவரைப் பிரிந்தாலும் சிந்தனைகளில், செயல்களில் ஏன் அவர் வரைந்த ஓவியங்களில் கூட தமிழீழம், மக்கள், அவர்களின் வளமான வாழ்வு என்பதையே காட்டிநிற்கிறது.
ஆன்மீகத்தில் அவர்கொண்டிருந்த அதிக ஈடுபாடு புரட்சிக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தொடர்பினையும், ஒற்றுமையையும் தெளிவுபடுத்தக்கூடிய வகையில் அவரை உயர்த்தியிருந்தது. தனது துணைவிக்கு எழுதிய கடிதக் குறிப்பொன்றில்….
விறகு கொத்தும் கந்தனும்
கள் வடிக்கும் பூதனும்
கோவணத்துடன் தோட்டம்
கொத்தும் ராமையாவும்
கரைவலை இழுக்கும் கோபுவும்
தனது வாழ்நாளிலும் சரி வயது போன காலத்திலும் சரி மற்றவர்களில் தங்கி வாழ்ந்ததையும், பிச்சையெடுத்துச் சேர்த்ததையும் பார்த்திருக்கிறேன். இவர்களின் வாழ்வு வளம் பெறவேண்டும். இதைத்தான் ஆன்மீகமும் சொல்லுகின்றது, புரட்சியும் சொல்லுகின்றது. ஆன்மிகம் போதிக்கின்றது. புரட்சி வழிகாடுகிறது ஆன்மீகமும் புடட்சியும் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் என மனதில் வெளிப்பாட்டை அதில் வரைந்திருந்தார். மக்கள் படும் துன்பங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு ஒரு அமைதியை ஏற்படுத்தி வளமான வாழ்வை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு அவரது சமாதானப் பயணம் ஆரம்பமாகியது. அவரின் தற்காலிக பிரிவுத்துயரை இந்தியாவில் பிறந்த அந்த நாயினால் கூட தாங்கிக்கொள்ள முடியாது போனது.
ஆனால் இந்திய வல்லாதிகமோ அவரையும் அவரது தோழர்களையும் இவ்வுலகிலிருந்து நிரந்தரமாகவே பிரித்துக்கொண்டது. இந்திய வல்லாதிக்கம் பலிகொண்டது ஒரு புரட்சி வீரரை மட்டுமல்ல, ஒரு ஆன்மீகவாதியை. இதற்கும் மேலாக எல்லாமே உருவாக்கிய அன்பின் வடிவத்தையுமே பலிகொண்டது. மாற்றானிடம் சரனாகதியடையாமல் தானும் தன் தோழர்களுடன் கப்பலைத் தகர்த்து வீரகாவியமாகிய அவர்களின் நினைவுகளுடன் ஆயுதங்களை இறுகப் கொள்வோம்.
- அருணா (போராளி)
எரிமலை 2000 இதழிலிருந்து…..
www.thesakkaatu.com

0 Responses to அன்பின் வடிவமாய்…