Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் அனிபா. இவரது மகன் தமீன் அன்சாரி (15). இவன் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான்.

இந்நிலையில் வெட்டுவாங்கேணியில் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நீலாங்கரை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சிறுவன் தமீம் அன்சாரியை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

அப்போது அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியபோது, தவறுதலாக அவரது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு, சிறுவன் தமிம்அன்சாரியின் இடது பக்க தொண்டையில் பாய்ந்து பின்பக்கமாக வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த தமீன் அன்சாரி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான். உடனடியாக இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசாருடன் சேர்ந்து அவனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் தமீம்அன்சாரி அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே சிறுவன் சுடப்பட்டது குறித்து தகவலறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to சிறுவனை துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com