நாட்டுக்குள் பௌத்த தீவிரவாதிகளை வளர்த்துவிட்டு இஸ்லாமிய பள்ளிகளையும், கத்தோலிக்க தேவாலயங்களையும் உடைக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம்,
சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்புவதற்காக இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க நாடுகளிடம் ஆதரவினைக் கோருகிறது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றியதில்லை. அப்படியிருக்கும் நிலையில் வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்படும் சாத்தியம் உருவாகியுள்ளது. அதனை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு ஆதரவு கோருகிறார்.
ஆனால், மறுபுறத்தில் நாட்டுக்குள் பௌத்த தீவிரவாதிகளை அரசாங்கம் வளர்த்துவிட்டுள்ளது. அதனால் இஸ்லாமிய, கத்தோலிக்க மத- மார்க்க நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளையே தொடர்ந்தும் வழங்கி வந்துள்ளது. மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளை எப்படியாவது ஏமாற்றி தன் பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to பௌத்த தீவிரவாதிகளை வளர்த்துவிட்ட அரசாங்கம் இஸ்லாமிய நாடுகளிடம் ஆதரவு கோருகிறது: மனோ கணேசன்