மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
பலஸ்தீனத்துக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று புதன்கிழமை இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவவையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
அதனையடுத்து, ஜெருசலேம் புராதன நகரத்திலுள்ள புகழ்பெற்ற மதத்தலங்களுக்குச் சென்று பார்வையிட்டார். இன்றைய தினம் இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பதுடன் தமது இஸ்ரேல் விஜயத்தின் ஞாபகார்த்தமாக மரக்கன்றொன்றையும் நடவுள்ளார்.
அத்தோடு, அந்நாட்டின் வர்த்தகத் தூதுக் குழுவினரையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். மேற்படி நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ்குணவர்தன, கமலா ரணதுங்க, ரொஷான் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு விஜயம்; இஸ்ரேலியப் பிரதமரையும் சந்தித்தார்