Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா முன்னோக்கி செல்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் கூறிய வாக்கு பழிக்கப் போகிறது. அந்த நல்ல நாட்கள் விரைவில் வரவுள்ளது. இன்னமும் 2 முதல் 4 மாதங்கள் காத்திருங்கள் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்று வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் உரையாற்றிய போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டு இந்தியர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் மேலும் அபிவிருத்தி அடையும். இந்தியா தொடர்பிலான நேர்மறையான எண்ணத்தினையே எதிர்காலத்திலும் கொண்டிருங்கள். நீங்கள் ஏமாற்றம் அடைவதற்கு ஒரு காரணமும் இல்லை. மோடி பிரதமராக வந்தால் அது தேசிய அனர்த்தமாகவே இருக்கும் என தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பிரதமரின் உரையை கேலி செய்து மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா முழுவதும் பாஜக ஆதரவு அலை வீசி வருகிறது 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைக்கும் உறுதியான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஊழல், முறைகேடுகள் என்பன நாட்டின் அத்தியாவசிய நடைமுறைகளை மாற்றி உள்ளன. என்.ஆ.ஐ. மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். மத்திய அரசு மீது கவனம் செலுத்துவதை விட மாநில அரசுக்கள் மீது கவனம் செலுத்துங்கள். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டாலர்க்ளாகவோ, பவுண்டாக எவ்வளவு இந்தியாவுகுள் கொண்டுவருகிறார்கள் என்பதை அளவீடாக எடுக்க கூடாது. அவர்கள் கொண்டுவரும் அறிவுக் களத்தையே நாம் பார்க்க வேண்டும். அவர்களது அறிவை இந்தியாவுக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் தான் பார்க்க வேண்டும் என்று அவர் பேசினார்.

மேலும், சர்தார் படேல் அனைவரின் ஒற்றுமைக்காககவும் போராடினார், குஜராத்தில் அவரது நோக்கத்தை நிறைவேற்றி அனைவரினதும் ஒற்றுமை பலத்தை நிரூபிப்பதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) முக்கிய பங்காற்றியிருந்தனர்.

 2022 இல் இந்தியா 75வது வருட சுதந்திரக் கொண்டாட்டங்களை பூர்த்தி செய்யவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா சர்வதேச ரீதியில் அபிவிருத்தி அடைந்த நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும். இந்தியாவின் ஒன்று சேர்ந்த வளர்ச்சிக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் கைகொடுக்க வேண்டும் என்றார்.

0 Responses to மோடியின் உரை : பிரதமரின் உரைக்கு கேலியாக பதிலடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com