மேஷம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மறக்கமுடியாத சம்பவங்கள் நடை பெறும். விருந்தினர்களின் வருகை உண்டு. தொழில் சம்மந்தமாக முக்கியப் பயணம் ஒன்றை மேற் கொள்வீர்கள்.
ரிஷபம்
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும். திருமண வாய்ப்புகள் தேடிவரும்.
மிதுனம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பலரின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பெற்றோர்களின் பிரியம் கூடும். நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள்.
கடகம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பொதுநலத்தில் ஆர்வம் கூடும். தொழிலில் இருந்த பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
சிம்மம்
வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நிறை வேறும். குடும்ப நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடரும் எண்ணம் மேலோங்கும்.
கன்னி
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். மனத் தளர்ச்சி அகலும். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வர்.
துலாம்
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வரும் விருந்தினரால் மகிழ்ச்சி காண்பீர்கள். செலவுகள் கூடலாம். புதிய நண்பர்களின் சந்திப்பு பொருளாதார நிலையை உயர்த்தும்.
விருச்சகம்
தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு திருப்தி காண வேண்டிய நாள். வி.ஐ.பி.களின் வீட்டு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி பணவரவு கிடைக்கும். ஆடை&ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.
தனுசு
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். ஏராளமான நண்பர்கள் உங்களைச் சந்தித்து மகிழ்வர். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். தொலை தூரப் பயணங்களை மேற்கொள்வதில் இருந்த தடை அகலும்.
மகரம்
பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முடிவு அனுகூலமாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தந்தை வழியில் தனலாபம் கிடைக்கும்.
கும்பம்
வழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பக்கத்து வீட்டாரைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
மீனம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புது முயற்சிக்கு அஸ்தி வாரமிடுவீர்கள். பொருள்வரவு திருப்தி தரும். ஆடை&அணிகலன்கள் அணிவதில் பிரியம் செலுத்துவீர்கள்.
0 Responses to இன்றைய ராசி பலன் | 19.02.2014