தனித் தெலுங்கானா மசோதாவை முறையின்றி நிறைவேற்றப் பட்ட இன்றைய தினம் ஜனநாயகத்துக்கு கருப்பு தினம் என்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி வரும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று ஜனநாயகத்துக்கு விரோதமாக தனித் தெலுங்கானா மசோதா தாக்கலாகி உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இன்றைய நாள் என்பது இந்திய ஜனநாயகத்துக்கு கருப்பு தினம் என்று கூறியுள்ளார்.
மேலும் நாளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார் ஜெகன் மோகன். இந்நிலையில் தெலுகு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் மசோதா நிறைவேற்றப் பட்டது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்று கூறியுள்ளார். ஆந்திராவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ள நிலையில்,நாளை கிரண்குமார் ரெட்டி தமது சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்னரே பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவரங்கள் வெளியிடுவார் என்றும் தெரிய வருகிறது.
0 Responses to இன்றைய தினம் இந்திய ஜனநாயகத்துக்கு கருப்பு நாள்!: ஜெகன் மோகன் ரெட்டி