Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரிய யுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரச மற்றும் கிளர்ச்சிப் படையினருக்கு இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தையின் 2 ஆவது சுற்று இன்று தடுமாற்றத்துடன் சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்துள்ளது.

முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஏற்பட்ட உறுதியற்ற சமாதான ஒப்பந்தத்தை இரு தரப்புமே மீறியுள்ள நிலையில் சர்வதேச மத்தியஸ்தர் குழு இரு தரப்பையும் தனித் தனியே சந்தித்துப் பேசிய பின்னர் இந்த 2 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்துள்ளார்.

சர்வதேச மத்தியஸ்தரான லக்தர் ப்ராஹிமி இரு தரப்பும் கலந்து ஆலோசித்த முக்கியமான விடயங்களுடன் சண்டையை உடனே நிறுத்தி இடைக்கால அரசு ஒன்றை உடனே நிறுவுவதற்கு முன்வருமாறு அரச மற்றும் கிளர்ச்சிப் படையின் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயினும் சிரிய அரசோ இந்த யுத்தத்தை தீவிரவாதிகளுக்கு எதிரான போர் எனப் பிரகடனப் படுத்துவதற்கு சம்மதம் தெரிவிக்குமாறு விண்ணப்பித்துள்ளது.

சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் சிரிய மக்கள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கடந்த மாதம் ஆரம்பிக்கப் பட்ட சமாதானப் பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் ஸ்திரமான முடிவுகள் எடுக்கப் பட முடியாமல் தோல்வியில் முடிவடைந்ததால் 2 ஆவது சுற்று சற்று அவசரமாகவே ஆரம்பிக்கப் பட்டிருந்தது. முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது எடுக்கப் பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சிரியாவின் முக்கிய வர்த்தக நகரான ஹோம்ஸ் இல் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவிப் பணியாளர்கள் சனிக்கிழமை முயன்ற போது அவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தடுமாற்றத்துடன் ஆரம்பித்த சிரிய சமாதானப் பேச்சுவார்த்தையின் 2 ஆவது சுற்று

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com