ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் நேற்று 12 ம் நாளாக Luxemburg நாட்டை நெருங்கி செல்கின்றது .நடைப்பயணம் செல்லும் பாதைகளில் தமிழ் மக்களின் இன அழிப்பை வேற்றின மக்களிடம் எடுத்துரைத்து துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
நீதிக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள எமது அறவளிப்போராட்டவீரர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதோடு அவர்களுடன் இணைந்து நிற்கின்றார்கள்.
பின்வரும் கோரிக்கைகளோடு நடைப்பயணம் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வீரத் தமிழ் மகன் முருகதாசன் திடலில் சென்றடைய உள்ளது.
1. பலதசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணத்தில் பங்கெடுக்கும் அறவளிப்போராட்ட வீரர்களின் சனநாயகப் போராட்டம் வெற்றி அளிப்பதற்காகவும் அவர்களை வாழ்த்துவதற்காகவும் உலகத் தமிழ் மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்: 0032 465 90 74 05
24.02.2014 திங்கள் மதியம் 15:00 மணிக்கு மாபெரும் எழுச்சி போராட்டம் நோர்வே பாராளுமன்றம் முன்பாக மக்கள் அவையாலும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாலும் நடாத்தப்படுகிறது.
அத்தோடு தமிழ் வான் ஜ.நாவை நோக்கி நீதி கேட்டு ஒஸ்லோவில் அமைந்திருக்கும் பாராளமன்றத்திலிருந்து பல ஜரோப்பிய நகரங்களை ஊடறுத்து உலக மக்களுக்கு தமிழர்களின் வலியை சுமந்து தமிழ் இனத்திற்கான நீதி கேட்டு செல்கிறது. ஆகவே நோர்வே வாழ் தமிழ் மக்களே அணி அணியாய் திரண்டு உரிமைக்காக குரல் கொடுப்போம் வாருங்கள்.

0 Responses to மாவீரர் கனவை சுமந்து தமிழீழம் அமைப்போம் உறுதி !!! 12 நாளாகத் தொடர்கிறது நீதிக்கான நடைப்பயணம் (காணொளி இணைப்பு)