Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போலித் தகவல்கள் உள்ளடங்கிய வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவித்து நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ணவை போலிஸ் விசாரணைக்கு அழைத்துள்ளது.

மேல் மாகாணத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் நவ சமசமாஜக் கட்சியின் வேட்டுமனுவில் போலியான தகவல்களைச் சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, அது தொடர்பில் விசாரிக்கவே நாளை செவ்வாய்கிழமை காலை கம்பஹா விசேட குற்ற விசாரணை பிரிவு பொலிஸாரிடம் ஆஜராகுமாறு விக்ரமபாகு கருணாரட்ணவை அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நவ சமசமாஜக் கட்சி கம்பஹாவில் தாக்கல் செய்த வேட்பு மனுவிலுள்ள 43 பெயர்களில், 15க்கும் அதிகமானவை போலியானவை என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வேட்புமனு சத்தியக்கடதாசியில் கைச்சாத்திட்ட சட்டத்தரணி மற்றும் சமாதான நீதவான் ஆகியோரும் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to போலித் தகவல்களை வழங்கிய விவகாரம்:விக்ரமபாகு கருணாரட்ண பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com