Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, தனி தொகுதிகள் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான தொகுதிகளில், அதிமுக இரு மடங்கு வெற்றி பெற்று சாதனை படைந்துள்ளது.

இதன் மூலம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மக்கள் மத்தியில், அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட, 44 தனி தொகுதிகளும், மலைவாழ் பழங்குடியினர் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் ஏற்காடு, சேந்தமங்கலம் தொகுதிகள்.

தனி தொகுதிகள், 44-இல், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த, கிருஷ்ணசாமி தலைமையிலான, புதிய தமிழகம் கட்சி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிபுத்துார், வாசுதேவநல்லுார் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் போட்டியிட்டது.

அதேபோன்று, அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த, இந்திய குடியரசு கட்சி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட முடிவுகளில், தனி தொகுதிகள், 44-இல் 29 தொகுதிகளிலும், பழங்குடியினருக்கான ஏற்காடு, சேந்தமங்கலம் தொகுதிகளிலும், அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

அதாவது, 46 தொகுதிகளில், 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, 4 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை தழுவியது.

அதேபோன்று மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட, அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி தொகுதிகளில் மக்கள் அளித்த தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியில், அதிமுகவுக்கு செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தனி தொகுதிகளில் சாதனை பெற்றது அதிமுக

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com