ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரின் விடுதலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.
நேற்று உச்ச நீதிமன்றம் மேற்கண்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, மூவரின் விடுதலைக்கு மாநில அரசு பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்து இருந்தது. அதன்படி இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக கூடியது. இதை அடுத்து தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில் மேற்கணட மூவரின் விடுதலையை மட்டும் அல்லாது நளினி உள்ளிட்ட மேலும் நால்வரின் விடுதலையையும் மாநில அரசின் அதிகாரத்தைக் கொண்டு மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் உறுதிப் படுத்தி உள்ளார்.
மேற்கண்ட 7 பேரின் விடுதலை இன்னும் 3 நாட்களுக்குள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. காரணம் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னரே விடுதலை நாள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், மத்திய அரசு முடிவு எடுக்க3 நாட்களுக்கு மேல் கால தாமதப் படுத்தினால், மாநில அரசின் உரிமைப்படி, மேற்கண்ட 7 பேரும் விடுதலை செய்யப் படுவார்கள் என்றும் முதல்வர் குறிப்பிட்டு உள்ளார்.




0 Responses to முருகன்,பேரறிவாளன்,சாந்தன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம்