Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனி பிரேமேன் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்பாயத்தின் தீர்ப்பு சென்ற வாரம் யேர்மன் வெளிவிவகார அமைச்சின் சிறிலங்காவுக்கு பொறுப்பான அதிகாரியிடம் உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்பட்டது.

மக்கள் தீர்ப்பாயத்தில் உலகின் மிக முக்கிய மனித உரிமையாளார்கள், சிந்தனையாளார்கள், செயல்பாட்டாளர்கள் என பல்வேறு நாடுகளில் இருந்து நீதிபதிகளாக கலந்து கொண்டவர்கள்  இனப்படுகொலைக்கான சட்டங்கள், அளவுகோள்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடாத்தி ஆழமாக ஆராய்ந்த பின்னர் சிறிலங்காவில் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது நடப்பது ஓர்  ’இனப்படுகொலை’ என அறிவித்திருக்கிறார்கள். இது முக்கியமானது. வரலாற்று சிறப்பு மிக்கது.

இத் தீர்ப்பை தீர்ப்பாயத்தில் நீதிபதியாக கலந்துகொண்ட ஐ.நாவின் துணை பொதுச்செயலாளார் பொறுப்பில் இருந்த திரு. டெனிஸ் ஹாலிடே அவர்களே  பேர்லினில் அமைந்திருக்கும் யேர்மன் வெளிவிவகார அமைச்சிடம் கையளித்தார்.

இச் சந்திப்பில் திரு. டெனிஸ் ஹாலிடே அவர்கள் ஈழத்தமிழர்கள் நிலமை குறித்து நீண்ட நேரம் ஆழமாக எடுத்துரைத்ததோடு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐநா மனிதவுரிமை பேரவை ஒன்றுகூடும் வேளையில் சிறிலங்காவில் நடக்கும் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு யேர்மன் அரசாங்கம் முதன்மையாக நீதியின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். தொடர்ந்து திரு. டெனிஸ் ஹாலிடே அவர்கள் யேர்மனியின் பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் சந்திப்பை நடாத்தியது குறிப்பிடத்தக்கது.

0 Responses to யேர்மன் வெளிவிவகார அமைச்சிடம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கையளிப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com