சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது.
66ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடுகின்ற போதும் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர். அந்த வகையில் யேர்மனியில் இலங்கை தூதரகம் அமைந்திருக்கும் பேர்லின் நகரத்தில் சிங்கள பேரினவாத அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை அம்பலப்படுத்தும் முகமாக தூதரகம் அமைந்துள்ள வளாகத்தின் அயல் வீதிகளில் நூற்றுக்கும் மேலான சுவர் ஒட்டிகள் தமிழின உணர்வாளர்களால் ஒட்டப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை தொடர்ந்தும் கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மையைக் எடுத்துச் சொல்வோம். நாம் ஒவ்வொரு தமிழனும் எமக்காய் குரல் கொடுக்கின்றபோதுதான் எமது தேசத்தின் விடுதலை சாத்தியமாகும் . "விண்மட்டும் புகழுற்று நின்ற தமிழன் விறைப்பற்று வீழ நாம் விட்டுவிடக்கூடாது."
எம் இனத்தை முழுமையாகத் துடைத்தழிப்பதற்காய் எத்தனையோ வஞ்சகங்களையெல்லாம் சிங்களம் தயங்காமல் செய்கின்றது. தமிழனின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் எமது பலம் தான் உறவுகளின் உயிரின் இருப்பை நிர்ணயிக்கப்போகின்றது. எத்தனையோ இடர் மிகுந்த பொழுதுகளிலெல்லாம் எம்மை எமது போராட்டம் தான் காப்பாற்றி வந்திருக்கின்றது.

0 Responses to சிங்கள இனவெறி அரசின் சுதந்திர நாளை கண்டித்து பேர்லின் நகரில் சுவர் ஒட்டிகள்!