”உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல ‘ என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் கூருவதினூடாக இவனை வெளிக்காட்ட முயசிக்கிறோம்.
அப்பொழுது இவன் சிறு பராயத்தினன். சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்கு மாகாணக் கிராமம் ஒன்றில் பிறந்தவன். பேரினவாதக் கோரங்கள் இவன் அயலினையும் தாக்கின. பல கிராமங்கள் காணாமல் போயின. ஆங்கில மருத்துவம் ஆரம்பப் படிகளையே கண்டிராதாஹ் பிரதேசம் அவனது. ஒருநாள் இவனின் வலக்கை மோதிரவிரலை அரவம் தீண்டிவிட்டது. அவசர அவசரமாக சில ஊர்கள் கடந்து ஊர்ப்பரியாரி ஒருவரின் வீட்டை வந்தடைகிறார்கள். தமிழர்கள் தமிழர்களிடையிலேயே தம்மை அடையாளம் காட்டப் பயந்த சூழல், ஒருவாறு இவர்கள் நிலைமையை விளங்கவைத்த்னர்.
உடனடியாக ஊர்மருத்துவம் தொடங்கியது. பாம்புக் கடிக்குள்ளான அவனது விரல் சவர அழகினால் கீறிக் கிழிக்கப்பட்டு, இரத்தம் வெளியேற்றப்பட்டு, மரபுவழி மருத்துவம் கொடுக்கப்பட்டது. விவதங்களிற்கு அப்பால் இவன் உயிர் தப்பினான் என்பது உண்மையானது.
தொடர்ந்த காலங்கள் இவனை ஒரு போராளியாக மாற்றியது. களங்கள் பலவற்றில் கால் பதித்தவனின் களச்செயற்ப்பாடுகள் பதிவற்றும் போனவற்றுள் அடக்கம். பின்னர் நிதித்துறையில் கணக்காய்வாளனாக கடமையேற்றான். அதனைத் தொடர்ந்து மருத்துவப்பிரிவுப் போராளியாக மாறினான். இடைக்காலத்தில் இவன் உள்வாங்கியிருந்த வியாபார உலக அறிவும், பின்னர் பெற்றுக்கொண்ட மருத்துவ அறிவும் கைகொடுக்க போர்மருத்துவத்தை வளர்க்க பல திட்டங்களை தீட்டிச் செயற்பட்டான். பனி, மழை, வெயிலென இவன் பார்ப்பதுமில்லை, ‘ அஸ்மா’ இவனை விட்டதுமில்லை. இவனை சேகுவராவுடன் ஒப்பிடுவதா இல்லை மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதருடன் ஒப்பிடுவதா என எங்களிடையே ஒரு விவாதமே நடக்கும்.
தமிழீழப் போர் வரலாறு அதீக நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. வன்னியில் தமிழர் போர்வீரம் அடைகாக்கப்படுகிறது. எதிரி எமது தந்திரோபாயப் பின் வாங்கல்களை எங்களின் நிரந்தரத் தோல்வியாக்க முயற்சிக்கிறான். அயல் அரசோ பழிவாங்கும் படலத்தை இறுக்கமாகவே கடைபிடிக்கிறது. நாங்கள் மூச்சுவிடுவதற்காக மூச்சுபிடித்து அடித்த அடியில் முல்லைத்தீவு முகாம் வீழ்ந்துவிட்டது. முந்நூறு போராளிகள் வீரச்சாவடைய, ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் காயமடைய எங்களின் மருத்துவ வளங்கள் வற்றிவிட்டன. எதிரி கிளிநொச்சி நோக்கி படைநகர்வை தொடங்கிவிட்டான். ‘ நீலன் நீ வந்தால் சண்டை வெல்லும், வராவிட்டால் சண்டை தோற்கும் ‘ துறைப் பொறுப்பாளரின் கூற்று ரீங்காரமிட தமிழீழத்தின் தொப்பிழ் கொடியூடு பயணத்தைத் தொடர்கிறான்.
முன்பின் அறிமுகமிலாத அயல்தேசம், மொழி உச்சரிப்பு வித்தியாசமே ஏற்ற கடமைக்கு உலைவைத்துவிடும். கூட்டிச் சென்றவர்களுக்கும், இவன் கூட்டுச்சேர இருந்தவர்களும் கைதிகளாயினர், அல்லது காணாமல் போயினர். இவனது நிலையோ பரசூட்டில் சகாரா பாலைவனத்தில் குதித்தவன் போலாகி விட்டது. தாய்மொழி பேசுபவர்களிடையே கூட வாய்திறக்க முடியாமல் செயற்கை ஊமையாக்கினான். இங்கு காயமடைந்த சிலநூறு போராளிகளினதும், களத்தில் நிற்கும் சிலவாயிரம் போராளிகளினதும் நன்நிலையும், உயிரும் இவனது செயற்ப்பாட்டில் தங்கியுள்ளது. இவனின் நிலையோ..?
ஊர்க்கோவில் ஒன்றின் முன்றலில் தாடிவளர்த்து, கந்தல் உடை உடுத்து, பதினைந்து நாட்களினுள் வயது அதிகரித்தவனாக, பிச்சைக்காரனாக, பசிவயிற்றைக் கிள்ள காத்திருக்கின்றான்.
‘ படைத்தவன் படியளப்பான் ‘ எங்கோ கேட்டது இவனுள் எதிரொலிக்கிறது. இவனுடன் போட்டிக்கு இன்னும் சில எழைசிறுவர்கள். பக்தனொருவன் உடைத்த தேங்காய்ச் சிதறல்களில் ஒன்றை அவர்களுடன் மல்லுக்கட்டி எடுக்கிறான். ஒட்டிய மண்ணை கையினால் தட்டிவிட்டு உண்கின்றான். தேசத்திற்காய் தேவனிடம் பிச்சை எடுக்கிறான்.
ஈழத்தமிழ் கதைத்தால் உடன் கைதாவான். சரளமாகத் தாய்மொழியும், சாதாரமாக ஆங்கிலமும் கதைக்கத் தெரிந்திருக்கும் ஊமையாகவே நடக்கின்றான், நடிக்கிறான். மூட்டை சுமந்து சிறு கூலி பெறுகின்றான். சோற்றை மட்டும் கடையில் வாங்குகிறான். ‘ ஏன் தம்பி கரி வேண்டாமா ? ‘ கடைக்காரனின் கேள்விக்கு பதில் கூறாமலே சற்றுத் தள்ளிச்சென்று தண்ணீர் தெளித்து உண்கின்றான்.
பிச்சை எடுப்பது, கூலி வேலைகள் செய்வது, பிரதேசங்களை படிப்பதென நாட்களைக் கடத்தியவன் ஒருவாறாக கடற்கரையை வந்தடைகின்றான். எப்படியோ ஈழப்போராட்ட அனுதாபியோருவரின் வள்ளத்தை அடையாளம் காண்கிறான். அவனுடன் தொடர்பு கொண்டு தன்னை இக்கரை சேர்க்கும்படி மன்றாடுகின்றான். நம்பிக்கையினத்துடன் இறங்கியவன் இவனை இக்கரையில் இறக்கி விடுகின்றான். மருந்து சேர்க்கச் சென்ற போராளி பல நாட்கள் பட்டினி கிடந்தது பரதேசியாக உருமாறி மீண்டும் சொந்தமண்ணில் கால் பதிக்கின்றான்.
தேசத்தின் தேவை மீண்டும் இவனை அக்கறை அனுப்புகின்றது. ‘ நீலன் உன்னை நம்பித்தான் இருக்கிறம். நீ சாமான் ‘ அனுப்பிறியோ, இல்லையோ சண்டை நடக்கும், மருந்துகள் வந்தால் பலர் தப்புவர். இல்லை இறப்பர்’. பொறுப்பாளரின் வாசகத்தை இதயத்தில் வாங்கியவன் மீண்டும் பயணத்தை தொடர்கின்றான்.
மீண்டும் பிரதேசங்களைப் படிக்கின்றான். நண்பர்களையும், முகாம்களையும் உருவாக்குகின்றான். பலநூறு மைல்கல் பயணம் சென்று சிறுசிறு அளவுகளில் பொருட்களை கொள்வனவு செய்கிறான். பாரிய அளவில் பொருட்களை கொள்வனவு செய்கிறான். பாரிய அளவில் ஒரு இடத்தில் வேண்டினால் பகைவனின் உலவுப்பிரிவிடம் சிக்கவேண்டிவரும் என்பதால், கணணிவலையினுள் புகுந்து வெவ்வேறு தேசங்களிலிருந்தும் தேவையானவற்றைத் தருவிக்கின்றான். தனியொருவனாக சில உள்ளூர் நண்பர்களுடன் மறைப்புக் கதைகளைக் கூறி மருத்துவப் பொருட்களை உரிய கடற்கரைக் கிராமங்களுக்கு கொண்டுவந்து என்பது விபரிப்பிற்கு அப்பாற்பட்ட கடினங்களையும், திட்டமிடல்களையும் கொண்டது. எது எப்படியோ ஆங்காங்கே பல தொன்போருட்கள் கரை சேர்க்கப்பட்டுவிட்டது.
பல லட்சம் பெறுமதியான பொருட்களைச் சேர்ப்பதற்கு பன்மடங்கு செலவு. இவற்றை நீர் புகாவண்ணம் பொலித்தின் பைகளில் போட்டு வாயினால் காற்றை உறிஞ்சி வெளியேற்றி பொதிகளாக்க வேண்டும். சிலரே இதனைச் செய்வார்கள். சுவாசத்தை தொய்வுடையவர்களுக்கு இவ்வாறு செய்யும் பொது நெஞ்சு விம்மி வெடிப்பது போன்றிருக்கும். நீலன் இதனை அளட்சியன் செய்தே செயற்பட்டான். மீண்டும் அப்பொருட்களை கடல், மணல்தாண்டி தொடையளவு கடல்நீர் தாண்டி தூக்கிவந்து சிறு சிறு வள்ளங்களில் ஏற்றவேண்டும். கடல் ஈரலிப்பும், உப்புக்காற்றும் இவனது ‘ அஸ்மா ‘ நோயை உலுப்பிவிட அதற்குரிய ‘ பம்மை ‘ எடுத்து அடித்துவிட்டு மீண்டும் மீண்டும், மூச்சிரைக்க மூச்சிரைக்க, தோள்புண் எரிவெடுத்து இரத்தம் கசியக்கசிய அவற்றை ஏற்றிவிடுவான். உரிய அளவு வந்தவுடன் வள்ளங்கள் புறப்பட்டுவிடும். மிகுதிப் பொருட்களை மறைவிடம் சேர்ப்பதென்பது….. ஏற்றியவை தமிழீழத்தை நோக்கி கொண்டுவரப்படும் சிலசமயங்களில் இடைவெளியில் கடற்படையினால் தாக்கப்பட்டு மருந்துப் பொருட்களும் மாவீரர் உடல்களும் கரையொதுங்கும். இதனைப் பத்திரிகைகளில் பார்த்து அறிந்து கொள்வார்கள். அப்பொழுதெல்லாம் அவன் நினைப்பான் இன்றில்லாவிட்டால் என்றோவொரு நாள் தனக்கு இப்படி நடக்குமென்று.
மீண்டும் தாயகம் திரும்புகின்றான். இப்பொழுது பரதேசியாக அல்ல. பரந்துபட்ட அறிவுடனும் செயல்புரியும் திறனுடனும் பிரதம மருத்துவர்களுடனும் துறைப் பொறுப்பாளர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொள்கிறான். திரும்பவும் களம் ஏறுகிறான். தேவையானவற்றை தேவையான நேரத்தில் தேவையான அளவில் அனுப்பி வைக்கின்றான்.
அந்நாட்டு உளவு ஸ்தாபனங்களிற்கு தண்ணி காட்டிவிட்டு பிறமொழி நகரங்கள் எல்லாம் சென்று வருகிறான். செலவைப் பார்க்காமல் பொருட்கள் வேண்டி காலம் போய் இப்பொழுது லாபமும் தரமும் பார்த்து தேவைகுரியவற்றை கொள்வனவு செய்து அனுப்புகிறான். தனியொருவனின் விடுதலைப்போரின் மருத்துவச் செயற்ப்பாடு தங்கியிருப்பது என்பது பாரிய ஆபத்துக்களில் குறிப்பிடத்தக்கது என்பது வெளிப்படையானதே. தனக்குத் தெரிந்த தகவல்களையும், அனுபவங்களையும் இன்னும் சில போராளிகளுக்கு பகிர்ந்தளித்துப் பயிற்ருவிக்கிறான். இப்பொழுது நீலன் தனக்குப் பதிலாகச் செயரடக்கூடிய சிலரை உருவாக்கிவிட்டான். இவன் பற்றிய தகவல்களும் அந்நாட்டு உளவுத்துறைக்கு தேவையான அளவு கிடைத்துவிடாது. அவர்களும் இவனை நெருங்கத் தொடங்கிவிட்டனர்.
‘” ஜெயசிக்குறு “‘ தனது இருதிமூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. ‘ நீலன் தாயகம் வா ‘ சந்தேக பாசையில் தகவல் அவனைச் சென்றடைகின்றது. பலகோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் உயிர்களைக் கொடுத்துப் பெற்ற அறிய அனுபவங்களுடன் தாய்ப்பசுவைக் கண்ணுற்ற கண்றென தாயகம் திரும்பிய நீலனை காலன் கடலில் வென்றுவிட்டான். அவன் சேர்த்துவந்த பொருட்களுடன், அவனினதும் அவனுடைய தோழர்களினதும் புகழுடல்கள் அக்கரையில் அலையில் மோதுவதாக பத்திரிகைகள் மீண்டும் செய்தி வெளியிட்டன. இங்கு இவன் மருத்துவப்பிரிவின் முதலாவது லெப். கேணலாக படமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றான். அடிப்படை மருத்துவ வசதிகளைக்கூட கண்டிராத கிராமத்தில் பிறந்தவன், உருவாகும் ஒரு தேசத்தின் மருத்துவக் கட்டுமானத்தை தாங்கியவனாக மாறியதும், இறுதி மூச்சுக்கு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த மருத்துவப்பிரிவின் செயற்ப்பாட்டிற்க்கு மூச்சுக்காற்றை வழங்கியதும் ஓர் அதிசயமான உண்மையாகவே எங்களால் நோக்கப்படுகிறது.
- தூயவன்.
விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி – சித்திரை 2003)
இணைய தட்டச்சு உரிமம் தேசக்காற்று.

0 Responses to லெப்.கேணல் நீலன் - வெற்றிகளின் பின்னால்…