Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மஹிந்தவின் ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று  யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் இதுவொரு கண்துடைப்பு நடவடிக்கையே என காணாமல் போனோரது குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. கூடிய அளவில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போதலகள் நடந்த வடமராட்சி பகுதிகளினில் இவ்விசாரணைகளை நடத்தாது திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கோப்பாய்ப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவில் காணாமல் போனவர்களுக்கானப் பதிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் யாழ். மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று கோப்பாய் பிரதேச செயலகத்திலும் நாளை சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், நல்லூர், யாழ் பிரதேசசங்களை உள்ளடக்கியதாக 16 மற்றும் 17ஆம் திகதிகளில் மாவட்டச் செயலகத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே கிடைத்த வாய்ப்பினைத் தவறவிடாது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த பதிவுகள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30.

0 Responses to மஹிந்த விசாரணைக்குழு கண்துடைப்பே! காணாமல் போனோரது குடும்பங்கள் சீற்றம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com