Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் புதைகுழிகளினை தொடர்ந்து திருகோணமலை நகரப்பகுதியினிலும் மனித புதைகுழிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும் உத்தியோகபூர்வமாக அகழ்வுகள் ஆரம்பமாகியிருக்காமையினால் மேலதிக தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை இதனிடையே மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 23ஆவது தடவையாக இன்று வியாழக்கிழமை தோண்டப்பட்டபோது,  ஒரு மனித எலும்புக்கூடு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றையதினத்துடனான  மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்களின் மொத்த எண்ணிக்கை  62 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட 04 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டு பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவுக்கு அமைய மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  வைத்தியசாலையில் 39 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் வைக்கப்பட்டுள்ளன.மீண்டும் எதிர்வரும் 17ஆம் திகதி   24ஆவது தடவையாகவும் மேற்படி மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

0 Responses to மன்னார் 62 ஆனது - திருகோணமலையிலும் புதைகுழியாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com